டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர் அவருடைய அதிரடி முடிவுகளால் பல்வேறு விமர்சனங் களை எதிர்க் கொண்டு வருகிறார்.
இதனால் அவர் மீதான இணையதள தாக்குதல் அவ்வப்போது நடைபெறும். இப்போது பிரபல தேடுபொறி தளமான
கூகுளில் முட்டாள் (idiot) என்று தேடினால் டொனால்டு டிரம்பின் புகைப் படங்கள் தெரிகிறது.
முட்டாள் என்று தேடினால் அமெரிக்க அதிபர் டிரம்பின் படம் தோன்றுவது புதிய சர்ச்சை உருவாகி யுள்ளது.
தேடலுக்கு கூகுள் உபயோகப் படுத்தும் ‘அல்காரிதம்’ இணையதள விமர்சகர்கள் தவறாக பயன்படுத்து கிறார்கள்.
அதாவது டொனால்டு டிரம்ப் புகைப் படங்களை, அவரை விமர்சனம் செய்யும் வார்த்தை யுடன் பதிவேற்றம் செய்கிறார்கள்.
இதற்கான பிரசாரங் களையும் மேற்கொண்டு சர்வதேச அளவில் அதனை வெளிப்பட செய்கிறார்கள்.
இப்போது முட்டாள் என்ற வார்த்தை யுடன் டொனால்டு டிரம்ப் புகைப்படத்தை பதிவு செய்து தேடுபொறியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளார்கள்.
முட்டாள் என்று படப்பிரிவில் தேடினால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் படம் தோன்றுவதன் மூலம் புதிய சர்ச்சை உருவாகி யுள்ளது.
டொனால்டு டிரம்பிற்கு எதிரான ஆன்லைன் போராட்ட த்தை மேற்கொள்பவர்கள், ரெட்டிட் என்ற
இணைய தளத்தில் குழுவாக முட்டாள் என்ற வார்த்தையை, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் படத்துடன் இணைக்கும் வேலையை மேற்கொண்டுள்ளனர்.
இப்போராட்டம் தீவிரம் அடையவே, இப்போது முட்டாள் என்று தேடினால் டொனால்டு டிரம்பின் புகைப்படம் வருகிறது என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மே மாதம் கூகுளின் தேடலில் ‘பப்பு’ என்ற இந்தி வார்த்தைக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின்
புகைப்படமும், ‘பேகு’ என்ற இந்தி வார்த்தைக்கு பிரதமர் மோடியின் படமும் வெளி வந்தது சர்ச்சையானது.
சமீபத்தில் இந்தியாவின் முதல் பிரதமர் என்ற கேள்விக்கு பிரதமர் மோடியின் புகைப்படம் வெளியானது, பின்னர் இதனை நிறுவனம் சரிசெய்தது.
Thanks for Your Comments