குகையில் சிக்கிய சிறுவர்கள்... உருக்கமான கடிதம் !

0
நீங்கள் கவலைப் படாதீர்கள். நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று தாய்லாந்து குகையில் இரண்டு வாரங்களாக சிக்கிக் கொண்டுள்ள சிறுவர்கள் தங்களது பெற்றோருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
குகையில் சிக்கிய சிறுவர்கள்... உருக்கமான கடிதம் !
தாய்லாந்து நாட்டின் மா சே நகரில் தாம் லுவாங் என்ற குகை உள்ளது. இந்தக் குகை 10 கி.மீ. நீளம் உடையதாகும். 

கடந்த வாரம் 11 வயது முதல் 16 வயது வரை உடைய 12 சிறுவர்கள் கொண்ட கால்பந்து அணியைச் சேர்ந்தவர்கள் இந்தக் குகைக்குள் சென்றனர். 

இந்தச் சிறுவர்களுடன் சேர்ந்து அணியின் துணைப் பயிற்சி யாளரும் சென்றார். ஆனால், இவர்கள் சென்ற நாளில் இருந்து அங்கு பருவமழை தீவிர மடைந்ததைத் தொடர்ந்து குகையை விட்டு வெளியேற முடிய வில்லை. 

குகைப் பகுதி முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்தது. இவர்களை அணி நிர்வாகம் தேடியது. பின்னர், தாய்லாந்து நாட்டின் கடற்படை வீரர்கள், பேரிடர் மீட்புப் படையினர் வரவழைக்கப் பட்டுத் தேடுதல் வேட்டையில் இறங்கினர். 

பிரிட்டிஷ் போன்ற சர்வதேச நாடுகளும் தாய்லாந்துக்கு உதவிக்கரம் நீட்ட, தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்றது.

பின்னர் சிறுவர்கள் இருக்கும் இடம் கண்டு பிடிக்கப் பட்டதைத் தொடர்ந்து சிறுவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. 
சிறுவர்கள் சுவாசிப்ப தற்காக ஏர் டேங்குகளை (சுவாசிப்பதற்கு தேவையான காற்று அடங்கிய சிறிய தொட்டிகள்) பொருத்தும் போது மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த சமான் குனான் வெள்ளிக் கிழமை உயிரிழந்தார்.

தற்போது அங்கு திடீர் மழை பெய்யத் தொடங்கி யுள்ளதால் மீட்புப் பணியில் தற்போது திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் குகையில் சிக்கிக் கொண்ட சிறுவர்கள் தங்களது பெற்றோருக்கு கடிதம் எழுதி யுள்ளனர்.

அதில், நீங்கள் கவலைப் படாதீர்கள். நாங்கள் உறுதியாகவும் பாதுகாப்பாக வும் இருக்கிறோம். ஆசிரியர்களே எங்களுக்கு அதிகமாக வீட்டுப் பாடம் கொடுக்காதீர்கள்" என்று கூறியுள்ளனர்.

தாய்லாந்து கடற்படை வெளியிட்ட கடிதம்

மேலும் சிறுவர்களின் பயிற்சியாளரும் அந்தச் சிறுவர்களின் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அதில், அன்பான பெற்றோர்களே! நாங்கள் அனைவரும் நலமாக இருக்கிறோம். 
மீட்புப் படையினர் எங்களை நலமாகப் பார்த்துக் கொள்கின்றனர். என்னால் முடிந்தவரை இந்தக் குழந்தைகளை நான் பார்த்துக் கொள்வேன் என்று குறிப்பிட்டி ருக்கிறார்.

இந்தக் கடிதத்தை தாய்லாந்து கடற்படை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings