பெண்ணிடம் புகாரை விசாரிக்கச் சென்ற காவலருக்கு சரமாரி வெட்டு !

0
சென்னை ராயபேட்டை பகுதியில் பெண்ணை கேலி செய்த புகாரை விசாரிக்கச் சென்ற காவலரை சரமாரியாக வெட்டிய ரவுடிகள் 6 பேர் கைது செய்யப் பட்டனர். 4 பேரை தேடி வருகின்றனர்.
பெண்ணிடம் புகாரை விசாரிக்கச் சென்ற காவலருக்கு சரமாரி வெட்டு !
ராயப்பேட்டை காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராக இருப்பவர் ராஜவேலு (35). இவர் நேற்று இரவு காவல் பணியில் இருந்தார். 

அப்போது இரவு 10-15 மணி அளவில் லாயிட்ஸ் சாலை பி.எம்.தர்கா குடிசை மாற்று வாரிய குடியிருப்பு அருகே 

பெண்ணை கிண்டல் செய்து தகராறு நடப்பதாக காவல் கட்டுப் பாட்டறையில் இருந்து வந்த தகவலின் பேரில் அங்கு ரோந்துச் சென்றார்.

பி.எம்.தர்காவுக்கு சென்ற போது அங்கு 5-க்கும் மேற்பட்ட நபர்கள் மது அருந்திக் கொண்டிருந்தனர். அவர்களை கலைந்து போக காவலர் ராஜவேலு கூறியுள்ளார். 

அப்போது கும்பலில் சிலர் தனியாக வந்து நம்மை மிரட்டுகிறான் போட்டுத் தள்ளுங்கள் என்று கூறி கற்களால் தாக்கி யுள்ளனர்.

இதனால் நிலைகுலைந்த காவலர் ராஜவேலு அங்கிருந்து தப்பிக்க முயன்ற போது அரவிந்தன் என்பவர் 
கத்தியால் ராஜவேலு வின் தலையில் 16 இடங்களிலும் இடது காதில் ஒரு இடத்திலும், இடது கன்னத்தில் ஒரு இடத்திலும் கத்தியால் வெட்டி யுள்ளார்.

மற்றவர்கள் உடனிருந்து தாக்க அவர்களிட மிருந்து தப்பித்து சாலையில் வந்த ஆட்டோவில் ஏறியுள்ளார். 

ஆட்டோ ஓட்டுநர் உடனடியாக அவரை ராயபேட்டை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளார். 

மயங்கிய நிலையில் அதிக ரத்தம் வெளியேறிய நிலையைல் மருத்துவ மனையில் காவலர் ராஜவேலுக்கு சிகிச்சை அளிக்கப் பட்டது.

காவலர் ராஜவேலுவை தாக்கிய அரவிந்தன் மீது பல காவல் நிலையங் களில் வழக்குகள் உள்ளது. 

அரவிந்தனுடன் சேர்ந்து காவலர் ராஜவேலுவை தாக்கிய மேலும் 9 பேரையும் போலீஸார் இரவு முழுதும் தேடினர். 
இதில் அரவிந்தன், ஜிந்தா, வேல்முருகன், அஜித்குமார், சீனு, மகேஷ் ஆகிய 6 பேர் சிக்கினர். மேலும் 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் இதேபோல் பள்ளி வளாகத்தில் மது அருந்திய வர்களை எழுந்து போகச் சொன்ன சுங்குவார் சத்திரம் 

காவலர் மோகன்ராஜ் கற்களால் தாக்கப்பட்டும், பீர் பாட்டிலால் குத்தப் பட்டும் கொல்லப் பட்டார்.

காவலர்கள் ரோந்துப் பணிக்கு செல்லும் போது இரண்டு பேராக செல்ல வேண்டும் என்பது விதியாக இருந்தும் 

ஆட்கள் பற்றாகுறை என்பதை காரணம் காட்டி இது போன்று அனுப்புவ தால் காவலர்கள் உயிர் கேள்விக் குறியாகி வருகிறது.

இது போன்ற நிகழ்வுகளில் சிக்கும் ரவுடிகள் சில நாட்களில் வெளியே வந்து விடுவதும், பின்னர் அவர்கள் போலீஸை வெட்டியவன் என்பதை வைத்தே மாமுல் வாங்கி பிழைப்பதும், 
குற்றச் செயல்களில் ஈடுபடுவதும் அதிகரித்து வருகிறது. கொடுஞ் செயல்களில் ஈடுபடுபவர்கள் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும், 

ஆனால் அது நடை முறையில் இல்லாத தால் இது போன்ற நிகழ்வுகள் நடப்பதாக சில காவலர்கள் தெரிவிக் கிறார்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings