கே.ஆர்.எஸ், கபினி அணைகளில் இருந்து தமிழகத்து க்கு தண்ணீர் திறப்பு தொடர்ந்து அதிகரிக்கப் பட்டு வருகிறது.
இரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு வினாடிக்கு 1.15 லட்சம் கனஅடி தண்ணீர் செல்கிறது.
கர்நாடகத்தில் கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.
பருவமழை தொடங்கிய முதல் நாளிலேயே கர்நாடக கடலோர மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்தது.
அதன் பிறகு பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் மழை தீவிரம் அடைந்தது.
இதேப் போல காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்தில் உள்ள
தலைக்காவிரி மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்தது.
இந்த மழை காரணமாக மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப் பட்டணா தாலுகா கண்ணம் பாடி கிராமத்தில்
காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்து உள்ள கே.ஆர்.எஸ். (கிருஷ்ணராஜ சாகர்) அணையில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது.
அதுபோல் வயநாடு மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கன மழையால் மைசூரு மாவட்டம்
எச்.டி.கோட்டை தாலுகா பீச்சன ஹள்ளியில் உள்ள கபினி அணைக்கும் வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
இதனால் இரு அணைகளில் இருந்தும் கடந்த ஒரு வாரமாக 20 ஆயிரம், 30 ஆயிரம் கனஅடி வீதம் நீர் திறந்து விடப்பட்டு வந்தது.
அணை களுக்கு அதிகளவு நீர் வருவதால் பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து
நேற்று 1 லட்சத்து 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
இரு அணைகளில் இருந்தும் 1 லட்சத்து 15 ஆயிரத்து 277 கனஅடி நீர் காவிரியில் தமிழக த்திற்கு திறந்து விடப்பட்டது.
கர்நாடக அணைகளில் இருந்து தொடர்ந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்படுவ தால்,
மேட்டூர் அணையின் நீர்மட்டம் விரைவில் 100 அடியை எட்டும் என எதிர் பார்க்கப் படுகிறது.
Thanks for Your Comments