தமிழ் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர் கலையரசன் ஆகியோர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தனர்.
இந்த சந்திப்பின் போது அரசியல் மற்றும் திரைத்துறை, சமூகம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பு குறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டரில் புகைப் படத்துடன் பதிவு செய்துள்ளார்.
டெல்லியில் ராகுல் காந்தியுடனான சந்திப்பின் போது, ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் விவகாரம் குறித்தும் பேசியதாக தெரிகிறது.
இந்நிலையில், பேரறிவாளனை விடுவிக்க தங்கள் குடும்பத்திற்கு எந்த ஆட்சேபமும் இல்லை என ராகுல் கூறியதாக இயக்குனர் ரஞ்சித் தெரிவித் துள்ளார்.
ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப் பட்டு இரண்டு ஆயுள் தண்டனை காலங்கள் முடிந்த பிறகும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்யப் படாததை அரசியல் கட்சிகள் தொடர்ந்து கண்டித்து வருவது குறிப்பிடத் தக்கது.
Thanks for Your Comments