செல்பி எடுக்கும் போது மின்கம்பியின் மீது விழுந்த சிறுமி !

0
ரஷ்யாவின் உழியனோவ்ஸ்க் பகுதியில் அமைந்திருக்கும் கிராமத்தில் 13 வயது சிறுமி ஒருவர் தன் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற போது, அங்கிருந்த ரெயில்வே மேம்பாலத்தில் நின்று செல்பி எடுத்துள்ளார்.
செல்பி எடுக்கும் போது மின்கம்பியின் மீது விழுந்த சிறுமி !
இந்நிலையில் பாலத்தில் நின்று செல்பி எடுத்துக் கொண்டிருந்த 13 வயது சிறுமி திடீரென்று அங்கிருந்து தவறி ரெயில் செல்வதற்கு பயன்படுத்தப் படும் மின்சார கம்பியின் மீது விழுந்துள்ளார்.

சுமார் 3000 வோல்ட் மின்சாரம் செல்லக் கூடிய கம்பியின் மீது விழுந்ததால், அப்பெண் துடி துடித்துள்ளார். 

இதை யடுத்து போன் பேசிக்கொண்டிருந்த சக தோழி திரும்பி பார்த்த போது, தோழி மின்சார கம்பியில் விழுந்ததை பார்த்து அதிர்ச்சி யடைந்து என்ன செய்வது என்றே தெரியாமல் உறைந்து போயுள்ளார்.

அந்த நேரத்தின் ரயில் ஓட்டுனர் சிறுமி மின்சார கம்பியில் விழுந்து துடித்து கொண்டிருப்பதை பார்த்துள்ளார்.
அதன் பின் உடனடியாக அவர் அந்த மின்சார கம்பிக்கு செல்லும் மின்சாரத்தை போன் மூலம் அதிகாரி களுக்கு தொடர்பு கொண்டு நிறுத்தி விட்டதாக கூறப் படுகிறது. 

இதை யடுத்து அந்த சிறுமி உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப் பட்டுள்ளதாக வும், சுயநினைவு திரும்பிய வுடன் அந்த சிறுமிக்கு நடந்த சம்பவம் குறித்து தெரிய வில்லை எனவும், 

பெரிய அளவிலான காயம் ஏற்பட்டுள்ள தாகவும் கூறப்படுகிறது. சிறுமியின் பெயர் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாக வில்லை.
அவர் சுமார் 13 அடி உயரத்தில் மின்சார கம்பியில் தொங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தாகவும் கூறப் படுகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings