சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் மனைவி லதா ரஜினி காந்திடம் கடன் நிலுவைத் தொகை சம்பந்தமாக உச்சநீதி மன்றம் சரமாரியாகக் கேள்வி எழுப்பி யிருக்கிறது.
நடிகர் ரஜினி காந்தை வைத்து அவருடைய 2-வது மகள் சவுந்தர்யா கோச்சடையான் 3டி அனிமேஷன் படத்தை இயக்கினார். இந்தப் படம் கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் வெளியானது.
படம் வெளியீட்டு க்கு முந்தைய தயாரிப்புப் பணிக்காக ஆட் பீரோ விளம்பர நிறுவனம் லதா ரஜினிகாந்த் இயக்குநராக உள்ள மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவன த்துக்கு கடன் அளித்திருந்தது.
இந்தக் கடனுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்திருந் ததாக கூறப் படுகிறது. அதே போல் படத்தின் உரிமையையும் தருவதாக லதா ரஜினிகாந்த் வாக்குறுதி அளித்திருந்த தாகத் தெரிகிறது.
ஆனால், வாக்குறுதி அளித்த மாதிரி கடனையும் திரும்பத் தரவில்லை, படத்தின் உரிமையையும் தரவில்லை எனக் கூறி ஆட் பீரோ நிறுவனம் லதா ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில், "ஆட் பீரோ விளம்பர நிறுவனத்திடம் பெற்ற கடனை ஏன் இன்னும் திரும்பத்தர வில்லை?
எப்போது அதை தரப் போகிறீர்கள்" என சரமாரியாக உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியி ருக்கிறது. லதா ரஜினிகாந்த், ஆட் பீரோ நிறுவனத்துக்கு இன்னும் 6.20 கோடி ரூபாய் பணம் தரவேண்டும்.
Thanks for Your Comments