துப்பாக்கியால் மிரட்டி கணவனின் காதை துண்டித்த மனைவி !

0
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் நர்கல்டங்க என்ற பகுதியைச் சேர்ந்தவர்  முகமது தன்வீர் ( வயது 20) 
துப்பாக்கியால் மிரட்டி கணவனின் காதை துண்டித்த மனைவி !

இவரது மனைவி மும்தாஸ் தன்வீரை விட வயதில் மூத்தவர் ஆவார். இவர்களுக்கு  2 வருடங்களுக்கு முன் திருமணமாகி உள்ளது.


நன்றாக சென்று கொண்டு இருந்த இவர்களது வாழ்க்கையில் திடீர்  என சிக்கல் எழுந்தது. தன்வீரை தினமும் அவரது மனைவி அடித்து கொடுமை படுத்தியதாக கூறப் படுகிறது.

இதனால் சில சமயம் தன்வீர் வீட்டை விட்டு ஓடி விடுவார் மும்தாஸ் தனது குண்டர்கள் மூலம் அவரை அழைத்து வருவார்.

தன்வீரின் தாயார்  மும்தாஸிடம் தங்களை விட்டு விலகி இருக்கும் படி பலமுறை  கெஞ்சி உள்ளார்.

கணவரின் வீட்டை விற்றதன் மூலம்  அதிக பணம் கிடைத்த போதும் கூட மும்தாஸ் அவர்களை விட வில்லை.

தன்வீர் மும்தாஸின் இல்லத்தில் வசித்து வந்தார், அவரின்  தாயை சந்திக்க தனது சொந்த ஊருக்கு  செல்ல அனுமதிக்கப் படவில்லை.

சமீபத்தில் தன்வீர் அவர் முல்லிக்பூரிலிருந்து ஓடி விட்டார் ஆனால் அவர் மீண்டும் அழைத்து வரப்பட்டு  மும்தாஸ் மற்றும் அவரது சகோதரிகளால் கொடூரமாக தாக்கப் பட்டார். 


பின்னர் நேற்று இரவு மும்தாஸ் மற்றும் அவரது சகோதரிகள் துப்பாக்கி முனையில் அவரது காதுகள் துண்டித்து உள்ளனர்.

தன்வீர் அவர்களிடம் இருந்து தப்பி உயிர் பிழைத்து உள்ளார். இது குறித்து தகவல் அறிந்து வந்த அவரது உறவினர்கள் அவரை என்ஆர்எஸ் மருத்துவ மனையில் சேர்த்தனர்.

தன்வீர் ஏன் மும்தாஸை திருமணம் செய்து கொண்டார் என தெளிவாக பதில் அளிக்க வில்லை.

அவரின்   நண்பர் மும்தாஸ்  புத்திசாலித் தனமாக பயன்படுத்தி தன்வீரை திருமணம் செய்து கொண்டதாக  கூறுகிறார்.  


இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்,. மும்தாஸ் மற்றும் அவரது சகோதரி தலை மறைவாகி உள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings