கடந்த புதன்கிழமை டென்மார்க்கில் முழு முகத்தையும் மூடும் வண்ணம் நிஜாப் அணிந்ததற் காக 28 வயதான இஸ்லாமிய பெண் ஒருவரிடம் அபராதம் விதிக்கப் பட்டது.
டென்மார்க்கில் இதற்காக அபராதம் விதிக்கப்பட்ட முதல் பெண் அவர் தான். இது இஸ்லாமியர் களைப் புண்படுத்துவ தாக உள்ளது எனக் கொந்தளித் துள்ளனர்.
கடந்த புதன்கிழமை ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் டென்மார்க்கில் பொது இடங்களில் முகத்திரை அணிவதில் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது.
அவற்றில் நேரடியாக புர்கா, நிஜாப் எனக் குறிப்பிடாமல் "பொது இடங்களில் முகத்தை முழுமையாக மறைக்கும் விதமாக முகத்திரையோ,
ஆடையோ அணிந்தால் அபராதம் விதிக்கப்படும்" எனச் சட்டம் கொண்டு வரப்பட்டது. சட்டத்தை மீறி நடந்தால் 100 க்ரோனெர் அபராதம் செலுத்த வேண்டும். இவை இந்திய மதிப்பில் 10,600 ரூபாய்.
இந்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய மக்களும் மனித உரிமை ஆர்வலர்களும் போராட்டத் தில் இறங்கி யுள்ளனர்.
புதன்கிழமை யன்று டென்மார்க்கின் ஹொர்ஷொல்ம் ( Horsholm) நகரில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் 28 வயதுடைய இஸ்லாமிய பெண் நிஜாப் அணிந்து வந்துள்ளார்.
அந்த நிஜாப்பை மற்றொரு பெண் அகற்ற முயற்சிக்கும் போது இருவருக்கும் இடையே சச்சரவு ஏற்பட்டுள்ளது.
இதனால் அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் இஸ்லாமிய பெண்ணிடம் நிஜாப் அணிந்ததற் காக 1000 க்ரெனெர் அபராதம் வசூலித்தனர்.
இருப்பினும் அவர் அதைக் கழட்ட வில்லை. இது போன்று பொது வெளியில் போராட்டம் நடத்துபவர் களும் புர்காவையோ நிஜாப்பையோ கழட்ட வில்லை.
இது ஒரு கலாச்சார ஒடுக்கு முறை, பிரிவினையை ஏற்படுத்துவது என அந்தச் சட்டத்திற்கு எதிராகப் பலரும் கருத்து தெரிவித் துள்ளனர்.
Thanks for Your Comments