136 அடியை எட்டிய முல்லை பெரியாறு அணை !

0
கேரளாவில் பெய்து தொடர் மழை காரணமாக முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டி உள்ளது. 
முல்லை பெரியாறு அணையில் தமிழக -கேரள எல்லையில் அமைந்துள்ளது. தமிழக பொதுப் பணித்துறை இவ்வணையைப் பராமரித்து வருகிறது.

இதன் கொள்ளளவு 15.5 டி.எம்.சி, உயரம் 155 அடி ஆகும். முல்லை பெரியாறு அணையின் மொத்த நீர்மட்டம் 152 அடியாகும். 


இந்நிலையில் கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் இடுக்கி அணை நிரம்பி யுள்ளது. 

இந்நிலையில் தொடர்மழை காரணமாக முல்லை பெரியாறு அணையும் வேகமாக நிரம்பி வருகிறது. 

இன்று காலை நிலவரப்படி 136 அடியை எட்டியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் 

பெய்து வரும் தொடர் மழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings