ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்பூரின் காந்தி ரகர் ரயில்வே நிலையம் அருகே உள்ள
சாலையோர நடை பாதையில் தூங்கி கொண்டு இருந்தவர்கள் மீது கார் ஏறியதில் 2 பேர் பலியாகினர்.
கட்டுப் பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய ஸ்கார்பியோ கார், நடை பாதையில்
தூங்கிய நான்கு பேர் மீது ஏறி இறங்கியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அப்பகுதியில் உள்ள மக்கள், ஸ்கார்பியோ காரின் ஓட்டுநரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கார் ஓட்டுநர் பற்றிய தகவல் இன்னும் வெளியாக வில்லை. காயம் அடைந்தவர்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
Thanks for Your Comments