கேரள மாநிலம் பினராயி அருகே உள்ள பதன்னக்காரா என்ற கிராமத்தில் ஐஸ்வர்யா என்ற 8 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் 21–ந் தேதி வாந்தி எடுத்தாள்.
அதைத் தொடர்ந்து உயிரிழந்தாள். அடுத்து ஐஸ்வர்யாவின் தாய்வழி பாட்டி கமலா (68), கடந்த மார்ச் மாதம் 7–ந் தேதி வாந்தி எடுத்தார். அதை யடுத்து இறந்தார்.
அடுத்த மாதம் (ஏப்ரல்) 13–ந் தேதி ஐஸ்வர்யா வின் தாய்வழி தாத்தா குஞ்சி கண்ணனும் (76), வாந்தி எடுத்து இறந்தார்.
ஒரே குடும்பத்தில் 4 மாதங்களில் அடுத்தடுத்து 3 பேர் ஒரே போல் வாந்தி எடுத்து உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் விரைவாக துப்பு துலக்கும்படி முதல்–மந்திரி பினராயி விஜயன் உத்தர விட்டார்.
போலீசாரின் சந்தேகப்பார்வை ஐஸ்வர்யா வின் தாயான சவுமியா (29) மீது விழுந்தது.
அவரை கடந்த ஏப்ரல் மாதம் 25–ந் தேதி போலீசார் கைது செய்து, 11 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
முடிவில் அவர் மகள், தாய், தந்தை என 3 பேரையும் விஷம் வைத்து கொன்றதாக ஒப்புக் கொண்டு வாக்கு மூலம் அளித்தார். அப்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகின.
சவுமியா, கணவரை பிரிந்து வாழ்ந்து இருக்கிறார். அவருக்கு 2 பெண் குழந்தைகள். 18 மாதமே ஆன இளைய மகள் கீர்த்தனா 2012–ம் ஆண்டு இறந்து விட்டாள்.
இந்த நிலையில் சவுமியாவு க்கு இன்னொரு ஆணுடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.
இருவரும் ஒரு நாள் உல்லாச மாக இருந்த போது, அதை மூத்த மகள் ஐஸ்வர்யா பார்த்து விட்டாள்.
இது பற்றி அவள் தாத்தா குஞ்சி கண்ணனிட மும், பாட்டி கமலாவிட மும் கூறினாள்.
அவர்கள் சவுமியாவை கண்டித்தனர். அத்துடன் மகளின் கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்தனர்.
அதைத் தொடர்ந்து அவர்களை கொன்றால் தான், கள்ளக் காதலருடன் உல்லாச வாழ்வு வாழ முடியும் என சவுமியா முடிவுக்கு வந்து திட்டம் தீட்டினார்.
அதன்படி சாப்பாட்டில் எலி விஷம் கலந்து தந்து மகள் ஐஸ்வர்யாவை யும், தாய் கமலாவை யும், தந்தை குஞ்சி கண்ணனையும் கொன்று இருக்கிறார்.
இந்த தகவல்கள், சவுமியா அளித்த ஒப்புதல் வாக்கு மூலத்தில் இடம் பெற்று உள்ளன.
இதை யடுத்து சவுமியாவை தலச்சேரி முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர் படுத்தி, கண்ணூர் பெண்கள் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் சிறை வளாகத்தில் உள்ள முந்திரி மரத்தில் சவுமியா நேற்று தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரி க்கு அனுப்பி வைத்தனர்.
Thanks for Your Comments