கேரளாவில் 35 அடிக்கு பாலத்தை கட்டி 100 பேரை மீட்ட மீட்பு படை !

0
கேரளாவில் வெள்ளநீரில் சிக்கி இருந்த 100 பேரை மீட்பு படை வித்தியாச மாக மீட்டுள்ளது. 35 அடி நீண்ட மர பாலத்தை கட்டி மீட்டு இருக்கிறார்கள்.
கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கேரளாவில் மழை பெய்து வருகிறது. 

இதனால் கேரளா மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது. இந்த பேய் மழையால் கேரளா மாநிலம் முழுவதும் முடங்கிப் போய் உள்ளது.

மாநிலம் முழுவதும் நீரில் முழுகி காட்சி யளிக்கிறது. மழையால் மாநிலத்தின் அணைகள் முழுவதும் நிரம்பி வழிகின்றது.


பெய்துவரும் தொடர் மழையால் மட்டும் அல்ல அணைகளி லிருந்து வெளியாகும் தண்ணீர் காரண மாகவும் கண்ணூர், 

கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மாட்டிக் கொண்டு தவிக்கின்றது.

அதுமட்டும் அல்லாமல் நிலச்சரிவு ஏற்பட்டு பல இடங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் கேரளாவில் உள்ள மலப்புழா என்கிற இடத்தில் மக்கள் வெள்ளநீரில் 
மாட்டிக் கொண்டு அந்த இடத்தை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையை அறிந்த இந்திய இராணுவப்படை மலப்புழா அருகே வெள்ளநீரில் சிக்கிக் கொண்டிருந்த அப்பகுதி மக்களை மீட்க களமிறங்கியது. 

வெள்ளநீரு க்கு நடுவே 35 அடிக்கு நீண்ட பாலத்தை வெகுவேகமாக மரத்தை வைத்து கட்டினார்கள்.

பாலத்தை கட்டி வெள்ளத்தில் தவித்த சுமார் 100 பேரை ராணுவப்படை பாதுகாப்புடன் மீட்டது. 

இதற்கு அந்த பகுதி மக்கள் சிலர் உதவி செய்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings