கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடு புழாவை அடுத்துள்ள வண்ணப்புரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 62).
இவரது மனைவி சுசீலா (53). இவர்களுடைய மகள் ஆர்ஷா (20), மகன் ஆதர்ஸ் (17). கடந்த 2 நாட்களாக கிருஷ்ணனின் வீட்டில்
ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் நேற்று அங்கு சென்று பார்த்தனர்.
அப்போது வீடு முழுவதும் ரத்தக் கறை படிந்திருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக தொடுபுழா போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.
அப்போது வீட்டின் முன் பகுதியில் ஒரு இடத்தில் ஈக்கல் மொய்த்து கொண்டிருந்தன.
அந்த இடத்தில் தோண்டி பார்த்த போது கிருஷ்ணன், சுசீலா, ஆர்ஷா, ஆதர்ஸ் ஆகியோரின் பிணங்கள் புதைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
மேலும் அவர்கள் உடல்களில் கத்தியால் குத்தப்பட்டும், இரும்பு கம்பியால் தாக்கிய காயங்களும் இருந்தன.
இதனால் அவர்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு இருந்தது உறுதி செய்யப் பட்டது.
இந்த சம்பவம் குறித்து தொடுபுழா போலீசார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Thanks for Your Comments