டெல்லி அருகே உள்ள பாண்டவ நகர் பகுதியில் பிரபலமான நகைக் கடையில் நேற்று பிற்பகலில் மர்ம நபர்கள்
துப்பாக்கி முனையில் 50 லட்சம் மதிப்புள்ள வைரம், தங்க நகைகளை கொள்ளை அடித்துள்ளனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியிருப்பதாவது:
நகைக் கடையில் கொள்ளை யடித்தவர்கள் 4 பேர் என தெரிய வந்துள்ளது. காரில் வந்த மர்ம நபர்கள் ஒருவர் நகைக் கடையில் வெளியே நின்று உள்ளார்.
மற்ற நபர்கள் நகைக் கடைக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் ஊழிய ர்களை மிரட்டி நகைகளை கொள்ளை யடித்துள்ளனர்.
மேலும் அங்கு இருந்த சிசிடிவி கேமராக் களை அடித்து நொறுக்கி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரபரப்பான டெல்லியில் துப்பாக்கி முனையில் நகைக்கடை ஷோரூமில் நகைகள் கொள்ளை யடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Thanks for Your Comments