மூன்று நாள் அடர்ந்த காட்டுக்குள் சிக்கிக் கொண்டு, உயிர்க்கு போராடிய 2 வயது குழந்தையை ஜப்பானில் 78 வயது முதியவர் ஒருவர் காப்பாற்றி இருக்கிறார்.
ஜப்பானில் உள்ள யமாகுச்சி பிராந்தியத்தை சேர்ந்த முதியவர் விடுமுறை நாளில் தன் பேரக்குழந்தை களை அழைத்துக் கொண்டு அங்குள்ள காட்டு பகுதிக்கு சென்றார்.
அந்த காட்டிற்குள் அவர்கள் அனைவரும் சுற்றிப்பார்த்து கொண்டி ருந்தார்கள்.
அந்த நேரத்தில் அவருடன் வந்த பேரக்குழந்தை களில் ஒரு குழந்தையான யோஷிகி புஜிமோட்டோ (2 வயது) திடீர் என்று காணாமல் போய் உள்ளது.
அதனால் அதிர்ச்சி யடைந்த அனைவரும் அவனை அங்கும் இங்குமாய் தேடினார்கள். தொடர்ந்து தேடியும் அவன் கிடைக்கவில்லை.
அதை யடுத்து, இது பற்றி அருகில் இருந்த காவல் துறையினரு க்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் போலீஸ் நன்கு தேடியும் மூன்று நாள் வரை குழந்தை கிடைக்க வில்லை.
இந்த நிலையில் தான் அந்த குழந்தையை அந்த பகுதியை சேர்ந்த 78 வயது சமூக ஆர்வலர் ஒருவர் கண்டு பிடித்துள்ளார்.
காட்டுக்குள் இருந்த ஒரு தண்ணீர் குட்டையின் அருகில் இருந்த பாறையில் அமர்ந்திருந்த அந்த குழந்தையை அவர் கண்டுபிடித்தார். அதன்பின் அந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.
காட்டில் இருந்த அந்த மூன்று நாட்களுமே அந்த குழந்தை காட்டுக்குள் குட்டையில் இருந்த தண்ணீரை குடித்துதான் உயிர் வாழ்ந்துள்ளான்.
தற்போது ஜப்பானில் இருக்கும் கடும் வெப்பத்தில், எந்த உணவும் அருந்தாமல், அந்த சிறுவன் மூன்று நாட்கள் காட்டுக்குள் தாக்கு பிடித்து இருந்துள்ளார்.
அந்த சிறுவனின் உடலில் வெயில் காரணமாக நீர்சத்து குறைந்து இருந்தது. மேலும் அவன் உடலில் சில இடங்களில் சில கீறல்களும் காய தழும்புகளும் இருந்தன.
அது காட்டில் சுற்றியதால் ஏற்பட்டது என கூறப் படுகிறது. அவனை மீட்டது குறித்து சமூக ஆர்வலர் இதுகுறித்து பேட்டி யளித்துள்ளார்.
அதில், நான் காட்டு க்குள் வழக்கமாக செல்வதுண்டு அப்படி இம்முறை சென்ற போது தான், காட்டில் ஒரு பாறையில் யாரோ ஒரு குழந்தை அமர்ந்து இருப்பது போல் தெரிந்தது.
பெரும்பாலும் இந்த பகுதியில் மனிதர்கள் நடமாட்டமே இல்லை என்பது எனக்கு தெரியும். எனவே எனக்கு சந்தேகமாக இருந்தது. அருகில் சென்று பார்த்த பிறகு தான் அது குழந்தை என்று தெரிந்தது.
அந்த குழந்தையை அந்த நிலைமையில் பார்த்ததும் என் இதயமே நின்று விடுவது போல இருந்தது. உடனே நான் அந்த குழந்தையை பத்திரமாக மீட்டு வந்தேன், என்று கூறினார்.
Thanks for Your Comments