கலைஞரை நினைத்து கண்ணீர் விட்டு அழும் 80 வயது தொண்டர் !

0
நான் சாப்பிடும் போதெல்லாம் கலைஞரை நினைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக 
எனது கையில் கலைஞர் பெயரை பச்சை குத்திக் கொண்டேன் என்று கண்ணீர் மல்கக் கூறியுள்ளார் 

சடையப்பன் என்ற 80 வயது திமுக தொண்டர். கருணாநிதியின் கதை மிகப் பெரியது. எதிலுமே அடக்க முடியாத வரலாற்றுக் காவியம் அது. 

அதன் ஒவ்வொரு அடக்கமும் விளக்க முடியாத விசுவாசத்தின் வெளிப்பாடாக இருக்கிறது.

இதோ இந்த முதியவரைப் பாருங்கள். கருணாநிதிக் காக கண்ணீர் வடிக்கிறார். இவரது பெயர் சடையப்பன். வயது 80. 


கருணாநிதியை எப்போதும் மறக்கக் கூடாது என்பதற்காக தனது வலது கையில் பச்சை குத்திக் கொண்டுள்ளார் இவர். 

கலைஞர் வாழ்க என்ற வாசகத்தை தனது வலது கரத்தில் பச்சை குத்தியதற்கான காரணமாக இவர் கூறுவது: 

எப்போதும் நான் கலைஞரை மறக்கக் கூடாது. சாப்பிடும் போதெல்லாம் அவரை நினைத்துக் கொள்ள வேண்டும் என்பதற் காகவே 
அவரது பெயரை எனது வலது கையில் பச்சை குத்தியுள்ளேன் என்று கூறும் போதே அவரால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. 

மு.க.முத்து, அழகிரி, ஸ்டாலின், செல்வி, கனிமொ, தமிழரசு.. இவர்கள் கருணாநிதி யின் சொத்துக்கள் இல்லை.. 

உண்மையான சொத்து சடையப்பன் போன்றோர் தான். கலைஞர் தொடர்ந்து வாழ்வார் இவர்களின் இதயங்களில்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings