தி.மு.க.,வில் இருந்து நீக்கப் பட்டுள்ள, முன்னாள் மத்திய அமைச்சர், அழகிரியும், அவரின் சகோதரர்,
தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினும் நேரடியாக சந்தித்து பேசி, நீண்ட நாட்களா கின்றன.
தி.மு.க., தலைவர் கருணாநிதி யின் உடல் நலம் குன்றிய பின், சென்னைக்கு வந்த அழகிரி,
கோபாலபுரம் வீட்டில், ஸ்டாலினை சந்திக்க நேர்ந்தாலும், இருவரும் பேசிக் கொள்வதில்லை.
தங்களுடைய கருத்துகளை, குடும்பத்தினர் வாயிலாகவே வெளிப் படுத்தினர்.
கடந்த, 20ம் தேதி, கோபாலபுரம் வீட்டில், கருணாநிதி உடல் நலம் தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்திலும், இருவரும் பேசிக் கொள்ள வில்லை.
தற்போது, மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருக்கும் கருணாநிதியைப் பார்க்க, யார் யாருக்கு அனுமதி தர வேண்டும் என்ற முடிவை, ஸ்டாலின் தான் எடுக்கிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம், கருணாநிதிக்கு அளிக்கும் சிகிச்சை தொடர்பாக, அழகிரி சில ஆலோசனை களை, ஸ்டாலினிடம் தெரிவித்தி ருக்கிறார்.
அதற்கு ஸ்டாலின், 'அப்படியே செய்திடலாம்' என, சம்மதம் தெரிவித் துள்ளார். அண்ணனும், தம்பியும் நீண்ட இடைவெளி க்கு பின் பேசியதை பார்த்து,
குடும்ப உறுப்பினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள தாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன... நன்றி - தினமலர்
Thanks for Your Comments