அமெரிக்காவில் தீப்பிடித்து உடல் எறிந்தவாறே ஓடி வந்த சிறுமி - ஃபயர் சேலஞ்ச் !

0
ஃபயர் சேலஞ்ச் என்பது எரியூட்டும் ரசாயனத்தை உடம்பில் ஊற்றிக் கொண்டு, நெருப்பைப் பற்ற வைத்துக் கொள்ள வேண்டும். 
அமெரிக்காவில் தீப்பிடித்து உடல் எறிந்தவாறே ஓடி வந்த சிறுமி - ஃபயர் சேலஞ்ச் !
அந்தத் தீ உடம்பில் பரவுவதற் குள் அணைத்து விட வேண்டும். இந்த இணைய உலகம், மனித மனங்களில் இருக்கும் பல விநோத குணங்களை நாளுக்கு நாள் வெளிச்சம் போட்டு வருகிறது. 

அவற்றில் பல குரூரத்திலும் விபரீதத்தி லும் கொண்டு போய் விடுகிறது. அப்படி ஒரு சம்பவம் தான், அமெரிக்காவின் டெட்ராயிட் ( Detroit) நகரில் நடந்துள்ளது.

சமீபமாக, ஃபயர் சேலஞ்ச் (Fire Challenge) என்ற பெயரில் சமூக வலை தளங்களில் ஒரு சவால் உலாவருகிறது. 

எரியூட்டும் ரசாயனத்தை (குறிப்பாக, மது வகையான திரவம்) உடம்பில் ஊற்றிக் கொண்டு, நெருப்பைப் பற்ற வைத்துக் கொள்ள வேண்டும். அந்தத் தீ உடம்பில் பரவுவதற்குள் அணைத்து விட வேண்டும். 

இந்தச் சவாலில் மது போன்ற திரவத்தை உடம்பில் ஊற்றிக் கொண்டு தீ மூட்டி, உடனே அணைத்து விடும் போது, காயம் ஏற்படாமல் தப்பிக்கலாம். 
இது தான் இந்தச் சவாலில் உள்ள ட்ரிக். ஆனால், இதை எதிர் கொள்ளும் பலரும், ட்ரிக்கைச் சரியாகக் கையாள தெரியாமல் விபரீதத்தில் சிக்குகிறார்கள். 

அதில் ஒருவர் தான் டெட்ராயிட் நகரின் 12 வயது டிமியாஹ் லாண்டெர்ஸ் ( Timiyah Landers).

ஃப்யர் சேலஞ்ச் விளையாட்டாக ஃபயர் சேலஞ்சில் இறங்கியவர், உடலில் பாதி எரிந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். 

வெள்ளிக் கிழமை (17ம் தேதி) மதிய உணவு சாப்பிட்டு ஓய்வாக இருந்த டிமியாஹின் தாய் பிராண்டி ஒவென்ஸ் ( Brandi Owens), திடீரென பெரும் அலறல் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டார். 

சில நொடிகளி லேயே, அவரின் மகள் டிமியாஹ் லான்டெர்ஸ், உடம்பில் தீ பற்றி எரியும் நிலையில், மாடிப்படியி லிருந்து அலறியபடி ஓடி வருவதைக் கண்டார். 

அதிர்ச்சியில் வெல வெலத்துப் போன ஓவென்ஸ், தீயை அணைக்க முயற்சி செய்தார். அவள் தலை முடியிலிருந்து முட்டிவரை எரிந்து கொண்டிருந்தாள். 

நான் அதிர்ச்சியில் அலறி விட்டேன். அது, மிகவும் மோசமாக இருந்தது” என அந்தச் சம்பவத்தை விளக்குகிறார்.

அப்போது, அங்கே வந்த ஒவென்ஸின் நண்பரான மர்குயில் ஷோலர் ( Marquell Sholar), விரைந்து செயல்பட்டு பாத்டப்பில் சிறுமியைத் தள்ளி யிருக்கிறார். 
அமெரிக்காவில் தீப்பிடித்து உடல் எறிந்தவாறே ஓடி வந்த சிறுமி - ஃபயர் சேலஞ்ச் !
எரிந்து கொண்டிருந்த டிமியாஹின் ஆடைகளைக் கைகளாலே உதறி விட்டுள்ளார் ஓவென்ஸ். 

`நான் நெருப்புக்குள் கையை விட்டு ஆடைகளைத் தூக்கி எறிந்தேன். அப்போது என் கைகள் காயப் பட்டத்தை அறியவில்லை. 

என் மகளைக் காப்பாற்ற வேண்டும் என்பது மட்டுமே எண்ணமாக இருந்தது” என்கிறார். இந்த பயர் சேலஞ்சை 2012-ம் ஆண்டில், முதல் முறையாக ஒருவர் செய்து பதிவேற்றினார். 

பிறகு, 2014-ம் ஆண்டில் அமெரிக்க இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தது. ஒரே நாளில் 10 பேராவது இந்தச் சவாலால் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டனர். 

இதனால், இந்த விபரீத விளையாட்டுக்கு எதிராக விழிப்புணர்வு செய்யப்பட்டது. இளைஞர்கள் மத்தியில் இதன் மோகம் குறைந்தது. 

ஆனால், விபரீதம் முற்றிலும் நீங்கி விடவில்லை என்பதற்குச் சாட்சியே இந்த 12 வயதுச் சிறுமி. 

சில மாதங்களு க்கு முன்பு, `ப்ளு வேல் சேலஞ்ச்’ (Blue Whale Challenge) அமெரிக்கா, இந்தியா, இத்தாலி, ரஷியா உள்ளிட்ட பல நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது, 
கடந்த ஆண்டு, சமூக வலை தளங்களில் பரவிய `ஹாட் வாட்டர் சேலஞ்ச்' ( Hot Water Challenge) இதே ரகம் தான். 

அமெரிக்கா வின் ஃபுளோரிடாவைச் சேர்ந்த 8 வயதுச் சிறுமியை, சகோதரர்கள் ஸ்ட்ரா ( Straw) மூலம் கொதிக்கும் நீரைக் குடிக்கச் செய்ததில், அந்தச் சிறுமி இறந்தே போனாள்.

இப்படிச் சமூக வலை தளங்களில் குழந்தைகளை யும் இளைஞர் களையும் குறி வைத்து,  உருவாக்கப்படும் விளையாட்டுகளி லிருந்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும். 

இணையத்தில் அவர்களின் நடவடிக்கை களைக் கண்காணிப்ப துடன், கடுமையான விதிமுறைகள் விதிக்கப்படவும் வேண்டும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings