காங்., தலைவர் ராகுலை 2019 லோக்சபா தேர்தலில் காங்., கட்சிக்கான பிரதமர் வேட்பாளராக காங்., அறிவித்துள்ளது.
கூட்டணி குறித்து முடிவு செய்யும் அதிகாரமும் ராகுலுக்கு வழங்கப் பட்டுள்ளது.
கூட்டணிக் காக பிற கட்சிகளுடன் பேச காங்., குழு ஒன்றை அமைத்து, புதிய வியூகம் அமைத்து வருகிறது.
இந்நிலையில், காங்.,ன் கூட்டணியில் சேரும் பட்சத்தில் மாயாவதியையோ அல்லது மம்தாவையோ பிரதமர் வேட்பாளராக காங்.,
முன்னிறுத்துமா என பத்திரிக்கை யாளர் ஒருவர் ராகுலிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ராகுல், மோடி தலைமையிலான பாஜ., அரசை வீழ்த்துவதே எங்களின் பிரதான இலக்கு. பா.ஜ.,
மற்றும் ஆர்எஸ்எஸ் பின்புலம் அல்லாத யாரையும் ஆதரிக்கவும், பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தவும் காங்., தயாராக உள்ளது என தெரிவித் துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், உ.பி., மற்றும் பீகாரில் வெற்றி பெறுவதே எங்களின் முக்கிய நோக்கம்.
பா.ஜ.,வை வீழ்த்த இந்த இரு மாநிலங்களி லும் வலுவான கூட்டணி அமைக்க காங்., முடிவு செய்துள்ளது.
உ.பி.,யில் 80 ம், பீகாரில் 40 ம் லோக்சபா இடங்கள் உள்ளன. இவ்விரு மாநிலங்களில் வெற்றி பெற்றாலே
லோக்சபாவில் எங்களின் பலம் 22 சதவீதம் ஆக இருக்கும். பா.ஜ., கூட்டணியில் இருந்து சிவசேனாவும்,
தெலுங்கு தேசம் கட்சியும் விலகி இருப்பது காங்.,க்கு கூடுதல் பலம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Thanks for Your Comments