இரவு கூட்டி சென்று மறுநாள் அழைத்து வரப்படும் காப்பக சிறுமிகள் !

0
உ.பி. காப்பக சிறுமிகளுக்கு பாலியல் புகாரில் ஒரு பகுதியாக கார்களில் இரவு அழைத்து சென்றால் மறுநாள் காலையில் அழைத்து வரப்படுவ தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
தியோரியா வில் ஒரு காப்பகம் தொடங்கி நடத்தப்பட்டு வந்தது. இதை கிரிஜா திரிபாதி, அவரது கணவர் மோகன் திரிபாதி மற்றும் அவரது மகள் ஆகியோர் நடத்தி வந்தனர். 

இந்நிலையில் இதற்கு அரசிடமிருந்து நிதியுதவி அளிக்கப்பட்டு வந்தது. இதை யடுத்து நாடு முழுவதும் காப்பகங்களில் நடத்தப்பட்ட 

சோதனையில் இங்கு சில முறைகேடுகள் நடந்து வருவதாக சிபிஐ அளித்த தகவலின் பேரில் அரசும் தனது நிதியுதவி அளிப்பதை நிறுத்திக் கொண்டது.

சிறுமி

எனினும் அந்த காப்பகத்தை தம்பதியினர் தொடர்ந்து நடத்தி வந்தனர். இந்த காப்பகம் லக்னோவி லிருந்து 300 கி.மீ. தூரத்தில் உள்ளது. 


இந்நிலையில் இந்த காப்பகத்தி லிருந்து 10 வயது சிறுமி ஒருவர் தப்பி வந்து போலீஸாரிடம் ஒரு புகாரை அளித்தார். கா

காரில் அழைத்து செல்லப்படுவது

அதில் காப்பகத்தில் உள்ள 40 சிறுமிகள் இருந்தனர். அந்த சிறுமிகள் சிகப்பு, வெள்ளை, கருப்பு நிற கார்களில் 
இரவு அழைத்து செல்லப் பட்டால் மறுநாள் காலையில் தான் அழைத்து வரப்படுவர் என்று அந்த சிறுமி புகார் அளித்தார்.

வேலையாட்கள்

மேலும் சிறுமிகள் அனைவரும் கட்டாயப் படுத்தப்பட்டு பாலியல் தொழிலுக்கு அனுப்பப் படுவதாகவும், 

காலை நேரங்களில் வேலையாட்கள் போல் அவர்கள் நடத்தப்படு வதாகவும் அந்த சிறுமி கூறினார்.

மறுநாள்

காப்பகத்தில் இருந்து தப்பி வந்த சிறுமி கடந்த 3 ஆண்டுகளாக அந்த காப்பகத்தில் வசித்து வந்தார். 

அவரை வேலைக்காரி போல் தம்பதியினர் நடத்துவதாக கூறினார். மேலும் இரவு அழைத்து செல்லப்படும் சிறுமிகள் மறுநாள் காலையில் வந்து அழுவதாக வும் கூறினார்.

சட்டவிரோத தத்தெடுப்பு


இங்கு தத்தெடுப்புகளும் சட்ட விரோதமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதை யடுத்து போலீஸார் அந்த காப்பகத்துக்கு சென்று 24 சிறுமிகள் மீட்கப் பட்டனர். 

மேலும் 15 சிறுமிகளை காணவில்லை என்றும் கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் 15 முதல் 18 வயதுக்குட் பட்டவர்கள். 

கோரிக்கை கோரிக்கை இதையடுத்து அந்த காப்பகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. 

பெண்கள் மற்றும் சிறுமிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த முக்கிய நடவடிக்கை களை யோகி ஆதித்யநாத் அரசு எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

பீகார் காப்பகத்திலும்

இதேபோல் பீகாரில் காப்பக உரிமை யாளர்கள் மற்றும் காப்பகத்துக்கு நிதியுதவி அளிப்பவ ர்களால் 
40-க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டதாக புகார்கள் எழுந்தன. 

இந்த சம்பவத்தை தட்டி கேட்ட ஒரு சிறுமியை கொன்று காப்பக வளாகத்திலேயே புதைத்ததாக கூறப்படு கிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings