சென்னை செங்குன்ற த்தில், ஆந்திராவி லிருந்து சட்ட விரோதமாக சிலிக்கான் மணல் கடத்திவந்து,
அத்துடன் கட்டு மானத்துக்கு தகுதியற்ற மணலை கலப்படம் செய்து வந்த 3 குடோன்களு க்கு, அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
கட்டிடங்கள் கட்ட தகுதியற்ற மணலை சிலிக்கான் மணலுடன் கலப்படம் செய்யும்
குடோன்கள் சென்னையை அடுத்த செங்குன்ற த்தில் ஏராளமாக இயங்குவ தாக புகார் எழுந்தது. கனிம வளத்துறை,
திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம், சென்னை காவல் ஆணையரிடம் தமிழ்நாடு மணல் லாரி உரிமை யாளர்கள் சங்கத்தினர் வீடியோ ஆதாரங் களுடன் புகார் அளித்தி ருந்தனர்.
ஆந்திராவி லிருந்து சட்ட விரோதமாக சிலிக்கான் மணல் கடத்தி வரப்பட்டு, கூவம் முகத்து வாரத்தில் அள்ளப்படும் கடற்கரை மணல்,
பழவேற்காடு உப்புநீர் ஏரியில் அள்ளப்படும் மணல், சவுடு மணல் ஆகியவை குடோன்களில் கொட்டி கலப்படம் செய்யப் படுகிறது என புகாரில் தெரிவிக்கப் பட்டிருந்தது.
கட்டுமானப் பணிகளுக்கு சிறிதும் தகுதியற்ற இந்தக் கலப்பட மணலை, கட்டு மானத்துக்கு ஏற்றது எனக்கூறி விற்பனை செய்வதாக வும்,
நூற்றுக்கும் அதிகமான இடங்களில் கலப்பட குடோன்கள் இயங்குவ தாகவும் புகாரில் குறிப்பிடப் பட்டிருந்தது.
இது குறித்து விரிவாக செய்திகள் வெளியிடப் பட்டன.
இதைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் செங்குன்றம் சுற்றுப் பகுதியில் சோதனை மேற்கொண்டது.
அதில், செங்குன்றம் வடகரை என்ற இடத்தில் மணல் கலப்படத்தில் ஈடுபட்டிருந்த 3 குடோன்களை கண்டறிந்த வருவாய்த் துறை அதிகாரிகள் அவற்றுக்கு சீல் வைத்தனர்.
கலப்படத்துக் காக மணல் கடத்தலில் ஈடுபடுத்தப் பட்ட 2 லாரிகளை அவர்கள் பறிமுதல் செய்தனர்.
இதே போல, இன்னும் ஏராளமான இடங்களில் மணல் கலப்படம் செய்யும் குடோன்கள் இயங்குவ தாகவும்,
அவை அனைத்திலும் ஆய்வு செய்து, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டு மெனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
Thanks for Your Comments