திமுக தலைவர் கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட வேண்டிய அண்ணா சமாதிக்கு அருகில் உள்ள இடத்தில் தயாரிப்புகள் தீவிரமாக நடந்து வருகிறது.
திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை மரணம் அடைந்தார். தற்போது அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடந்து வருகிறது.
காலையில் இருந்து வரிசையாக தலைவர்கள் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அங்கு லட்சக்கணக்கில் மக்கள் கூடி வருகிறார்கள் .
முக்கியமான அரசியல் பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
அதே சமயம் இன்னொரு புறத்தில் மெரினாவில் அவருக்கு சமாதி கட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
அண்ணா சமாதிக்கு அருகில் அவருக்கு இடம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.
நேற்று தமிழக அரசு அவருக்கு மெரீனாவில் இடம் கொடுக்க முடியாது என்று கூறி, பின் திமுக வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கு அவரச வழக்காக இன்று விசாரிக்கப் பட்டது. அதன்பின் திமுகவிற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப் பட்டது.
கடந்த 10 மணி நேர களேபரங் களுக்கு பிறகு தற்போது கருணாநிதியின் உடல் அடக்கம் செய்ய
மெரினாவில் சரியாக அவர் விருப்பப்படி அண்ணா சமாதிக்கு அருகிலேயே இடம் தேர்வு செய்யப் பட்டுள்ளது.
இதற்காக தற்போது குழி தோண்டும் பணிகள் நடந்து வருகிறது.
எதிர் காலத்தில் நினைவு மண்டபம் கட்டுவதை மனதில் கொண்டு பெரிய அளவில் குழி தோண்டப்பட்டு வருகிறது.
Thanks for Your Comments