லேசர் சாட்டிலைட்டினை அனுப்பும் நாசா - ஏன்? எதற்கு தெரியுமா?

0
நாசா நிறுவனம் அடுத்த மாதமளவில் லேசர் சாட்டிலைட் ஒன்றினை விண்ணில் செலுத்த வுள்ளது. ICESat-2 எனும் குறித்த சாட்டிலைட் ஆனது விண்ணில் இருந்து பூமியில் உள்ள பனிபடர்ந்த பிரதேசங்களை கண்காணிக்கும்.
லேசர் சாட்டிலைட்டினை அனுப்பும் நாசா - ஏன்? எதற்கு தெரியுமா?
இதன் ஊடாக பனிப்படலங்கள் என்ன காரணங்களி னால் விரைவாக உருகுகின்றன என்பதை கண்டறிய முடியும் என நம்பப்படு கின்றது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15ம் திகதி கலிபோர்னியா வில் உள்ள வென்டென் பேர்க் விமானப்படைத் தளத்திலிருந்து இச் சாட்டிலைட் விண்ணில் செலுத்தப் படவுள்ளது.

மேலும் ஒவ்வொரு செக்கனிற்கும் சுமார் 60,000 அளவீடுகளை எடுக்கும் திறன் இச் சாட்டிலைட் டிற்கு இருக்கின்றமை விசேட அம்சமாகும்.
அண்மைக் காலமாக பனிப்பிரதேசங் களில் உள்ள பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருவதுடன் கடல் நீர் மட்டமும் அதிகரித்துச் செல்கின்றது.

இதன் காரண மாகவே இவ்வாறான தொரு நடவடிக்கையில் நாசா நிறுவனம் இறங்கி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings