டெல்லி ஏர்போர்ட்டில் பவர் பேங்க் வெடித்த காரணத்தால் பெண் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார்.
கோபத்தில் இவர் செய்த செயல் தற்போது அவரை சிறையில் தள்ளி யுள்ளது. விமானத்தில் பவர் பேங்க் எடுத்து செல்ல கூடாது என்று சட்டம் உள்ளது.
பொதுவாக பவர் பேங்க் வெடிக்கும் என்பதால் இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது.
இந்த நிலையில் டெல்லியை சேர்ந்த மாளவிகா திவாரி இதனால் பிரச்சனையில் சிக்கியுள்ளார்.
இவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் இமாச்சல பிரதேசம் சென்றுள்ளார்.
சோதனை செய்தனர்
இந்த நிலையில் விமான நிலைய அதிகாரிகள் அவரை சோதனை செய்துள்ளனர். அப்போது அவரது பையில் பவர் பேங்க் இருந்துள்ளது.
விமான நிலைய அதிகாரிகள் அவரை உள்ளே அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளனர்.
ஆனால் அந்த பெண் கண்டிப்பாக பவர் பேங்கை எடுத்து செல்ல வேண்டும் என்றுள்ளார்.
வெடித்தது
இதனால் அவருக்கும் விமான நிலைய அதிகாரிகளு க்கும் இடையில் சண்டை வந்துள்ளது. அவரது பவர் பேங்க் வெடிக்கும் நிலையில் உள்ளது.
விமான நிலைய விதிப்படி அதை உள்ளே அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளனர்.
இதனால் அதிகாரி களுடன் அந்த பெண் சண்டை யிட்டுள்ளார்.
பதட்டமான சூழ்நிலை
இதனால், கோபமடைந்த அந்த பெண்,பவர் பேங்கை எடுத்து அதிகாரிகள் மீது வீசியுள்ளார். தவறி அந்த பவர் பேங்க் சுவரில் விழுந்துள்ளது.
இதனால் பவர் பேங்க் உடனே வெடித்துள்ளது. பெரிய சத்தத்தில் வெடித்த, அந்த பவர் பெரிய அளவில் புகையை ஏற்படுத்தியது.
இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது.
கைது
இந்த நிலையில் அந்த பெண் மீது வழக்கு பதியப்பட் டுள்ளது. முதலில் அது வெடிகுண்டு என்று மக்கள் பதறி இருக்கிறார்கள்.
வெடிபொருட்க ளுடன் விளையாடுதல், மற்ற உயிர்களுக்கு தீங்கு விளைவித்தல் உள்ளிட்ட
சட்டங்களில் அந்த பெண் வழக்கு பதியப்பட்டு கைது செய்யப் பட்டுள்ளார்.
Thanks for Your Comments