மறைந்தும் வாழும் தலைவர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு !

0
திருவாரூரின் சிறிய கிராமத்தில் பிறந்து உலகின் முக்கிய அரசியல் தலைவராக உருவெடுத்த கலைஞர் என்று 
அழைக்கப்படும் திமுக தலைவர் கருணாநிதி யின் வாழ்க்கை வரலாறு அளப்பரியது. வயது முதிர்ச்சி காரணமாக தற்போது அவர் மரணம் அடைந்து இருக்கிறார். 
சிறுவயதில் போராட தொடங்கிய அவர் வாழ்க்கையில் பல அளப்பரிய சாதனைகளை செய்துள்ளார். சினிமா, நாடகமும், அரசியல் என்று எல்லா துறையிலும் திறமை பெற்றவர் அவர்.

அவர் மக்களுக்கு கொண்டு வந்த திட்டமும் ஏராளம். அவர் வாழ்க்கை வரலாறு எல்லோரும் படிக்க வேண்டிய ஒன்று.

எங்கே பிறப்பு

ஜூன் 3, 1924 ஆண்டு கருணாநிதி திருக்குவளை என்ற திருவார் அருகே இருக்கும் கிராமத்தில் பிறந்தார். 

முத்துவேலர் மற்றும் அஞ்சுகம் அம்மையார் தம்பதிகளின் மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் தட்ஷிணா மூர்த்தி. 
பின் முத்துவேல் கருணாநிதி என்று பெயர் மாற்றி கடைசியில் கருணாநிதி என்று நிலை கொண்டது. 

அந்த சிறிய கிராமத்தில் தொடங்கிய அவரது வாழ்க்கை, உலகம் முழுக்க வியக்க வைக்கவும் வகையில் பெரிய அரசியல் வரலாறாக மாறியது.
ஏழ்மையான குடும்பம்

அவர் மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்தார். அவர் மட்டு மில்லாமல் அவரது அம்மா, அப்பா இருவரும் கூட ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் கள் தான். 

இதனால் பிழைப்பிற்காக அவரின் சிறிய வயதில் கோவில் நடன கலைஞராக பணியாற்றி இருந்துள்ளார். 
அவருக்கு சிறு வயதில் இருந்தே தமிழ் மீது பெரிய அளவில் ஆர்வம் இருந்துள்ளது. படிப்பில் தமிழில் மட்டும் அதிக கவனம் செலுத்தி இருக்கிறார்.

சமூக வாழ்க்கை

கருணாநிதி சரியாக 13 வயது நிரம்பி இருந்த போது, சமூக பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள தொடங்கினார். 
நீதிக்கட்சியை சேர்ந்த பட்டுக்கோட்டை அழகிரி பேச்சை கேட்டு மயங்கிய அவர், அரசியல் நிகழ்வுகளில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்திக் கொள்ள தொடங்கினார். 

அப்போது இருந்து சிறு சிறு மாணவர் இயக்கங் களில் தன்னை சேர்த்துக் கொண்டார்.

முதல் போராட்டம்

இவர் தன்னுடைய பள்ளி வாழ்க்கையிலேயே போராடி இருக்கிறார். 6ம் வகுப்பு சேருவதற் காக இவர் அரசு பள்ளிக்கு சென்ற போது, இவருக்கு கல்வி மறுக்கப்பட்டு இருக்கிறது. 
அப்போது இருந்த தலைமை ஆசிரியர் கஸ்தூரி ஐயங்காரை எதிர்த்து இவர் போராடி, அதே பள்ளியில் சேர்ந்து இருக்கிறார். 

அதன்பின் மிகப்பெரிய அளவில் 1938ல் இந்தி எதிர்ப்புப் போர் நடந்த போது அதில் முன்னின்றார்.

இந்தி போராட்டம்

தமிழகம் உள்ளிட்ட இந்தி இல்லாதா மாநிலங்களில் இந்தியை திணிக்க முற்பட்ட போது, அதற்கு எதிராக தமிழகம் கிளர்ந்து எழுந்தது.
இதனால் 1938ல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழகம் முழுக்க நடந்தது. 

இப்போதைய தமிழக அரசியல் தலைவர்களை பலரை அளித்தது, இந்த போராட்டம் தான். கருணாநிதியை அளித்ததும் இதே போராட்டம் தான்.

பத்திரிக்கை

தன்னை எப்போதும் ஒரு பத்திரிக்கை யாளனாக அடையாளம் காட்டிக் கொள்ளவதில் இவருக்கு பெரிய சந்தோசம் இருந்துள்ளது. 
1941ல் "மாணவநேசன்" என்ற மாத இதழைக் கையெழுத்து இதழாக மாணவர்களு க்காக தொடங்கி நடத்தினார். 

அதன்பின் தொடர்ச்சி யாக நிறைய பத்திரிக்கை களை நடத்தி இருக்கிறார். அண்ணா நடத்திய "திராவிட நாடு" இதழில் என்று நிறைய கட்டுரைகளும் எழுதி இருக்கிறார்.
முரசொலி தோன்றியது

இதன்முலம் வந்த அனுபவம் மற்றும் ஆர்வத்தால் "முரசொலி வெளியீட்டுக் கழகம்" என்ற பெயரில் ஒரு நிறுவனம் தொடங்கினார் . பின்னர் அது "முரசொலியை" மாத இதழாக மாறியது. 

10.08.1942ல் தொடங்கிய அந்த இதழ் இப்போது வரை தொடர்ந்து வெளிவந்து கொண்டு இருக்கிறது. திமுகவின் மிக முக்கிய இதழாக பார்க்கப் படுகிறது.

நாடகம்

தமிழ்நாடு நாடகங்களால் கொடி கட்டி பறந்த போது, இவர் நாடகங்களில் வசனம் எழுத தொடங்கினார். 

இதன் மூலமே இவர் தமிழகம் முழுக்க பிரபலம் அடைந்தார். அப்போது இருந்து பல முக்கிய அரசியல் தலைவர் களின் நட்பும், அறிமுகமும் அவருக்கு இந்த நாடகம் மூலமே கிடைத்தது. 

அதே போல் இந்த நாடகம் மூலமே அவருக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்தது. 28.5.1944 இவர் முதலில் ''பழனியப்பன்'' என்ற நாடகத்தை அரங்கேற்றினார்.

சோறு போட்ட தமிழ்

தமிழ் சோறு போடுமா என்ற கேள்விக்கு இவர்தான் சிறந்த பதில். தமிழை வைத்தே லட்சக் கணக்கில் சினிமாவில் சம்பாதித்தார். 

தமிழ் சினிமாவில் கதை வசனம் எழுதியே பல லட்சங்களில் சம்பாதித்தார். 
பராசக்தி தொடங்கி பல படங்களில் தீ தெறிக்கும் வசனம் எழுதி மக்களிடம் சென்று சேர்ந்தார்.

முதல் திருமணம்

11.11.44 அன்று பத்மாவதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த மணவாழ்க்கை மிகவும் நன்றாக சென்றது. 

அவர் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டார்.1948ல் அவரது மனைவி பத்மாவதி மரணம் அடைந்தார் .

மூவர்

அண்ணா, பெரியார் இருவரும் தான் கருணாநிதியின் அரசியல் குரு. இருவர் ஊட்டிய அரசியல் கருத்துக்கள் தான் கருணாநிதியை வளர்த்தது. 
இருவரின் மேடை பேச்சை கேட்டை இவர் தன்னை மெருகேற்றிக் கொண்டார்.

அதே போல் இருவரின் அரசியல் கருத்துக்கள் மூலம் தனக்கான அரசியல் பாதையை அமைத்துக் கொண்டார்.

திராவிடர் கழகம்
90 களின் மத்தியில் திராவிடர் கழகம் சரியான உருவம் பெற்றது. 19.4.1946 திராவிடர் கழக கோடி உருவானது. 

இதற்காக கருப்பு நிற கொடியில் தன்னுடைய ரத்தத்தை வைத்தார். அதன்மூலம் கருப்பு சிவப்பு கோடி உருவானது. அந்த கொடிய பின் திராவிட முன்னேற்ற கொடியாக மாறியது.

திருமணம்

1948ல் தயாளு அம்மாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அந்த திருமணத்திற்கு முன் சில நிமிடம் முன் நடந்த 
இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்து கொண்டார். பின் 1966ல் ராசாத்தி அம்மாவை திருமணம் செய்து கொண்டார்.

தி.மு.க

திகவிடம் இருந்து பிரிந்து திமுக உருவானது. 17.9.1949 இல் திராவிட முன்னேற்ற கழகம் பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப் பட்டது. 
இதில் கட்சியை உருவாக்க உழைத்த வர்களின் கருணாநிதியும் ஒருவர்,. அதன்பின் ஒரு தேர்தல் சென்று அதற்கு அடுத்த சட்டமன்ற தேர்தலில் திமுக போட்டி யிட்டது.

வெற்றி

முதல் முறையாக 1957ம் ஆண்டில் தமிழக சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார் கருணாநிதி.

1967ல் அண்ணா முதல்வர் ஆன பின், தமிழக பொது பணிதுறை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக வும் தேர்வானார். 

அறிஞர் அண்ணா மறைந்த பின் முதல்வர் பொறுப் பினையும் ஏற்றுக் கொண்டார், அதோடு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பொறுப்பையும் ஏற்றார்.

வருடம்

முதல் முறையாக தமிழக சட்டமன்ற உறுப்பினர் 1957 வருடம் தேர்வானார். முதல் முறை தமிழக முதலமைச் சராக 1969 தேர்வானார். 
இரண்டாவது முறையாகத் தமிழக முதலமைச்சராக 1971 தேர்வானார். மூன்றhம் முறையாகத் தமிழக முதலமைச் சராக 1989 தேர்வானார். 

நான்காம் முறை யாகத் தமிழக முதலமைச்சராக 1996 தேர்வானார் ஐந்தாம் முறையாகத் தமிழக முதலமைச்சராக 2006 தேர்வானார்.

தொகுதி

தமிழ்நாடு சட்டப் சபைக்கு பல தொகுதிகளில் போட்டி யிட்டுத் அவர் வெற்றி பெற்றார். 
முதல் முறையாக குளித்தலை தொகுதியில் வென்றார். தஞ்சாவூர், சைதாப் பேட்டை, அண்ணாநகர், திருவாரூர், திருவாரூர் ஆகிய தொகுதிகளில் வென்றுள்ளார். 

1957 - லிருந்து 2006 வரை போட்டி யிட்ட சட்டமன்றத் தேர்தல்கள் அனைத்திலும் வெற்றி பெற்ற ஒரே நபர் இவர் மட்டும்.

திட்டம்

இலவச மின்சாரம், கலைஞர் காப்பிட்டு திட்டம், இலவச அரிசி, இடஒதுக்கீடு, போலீஸ் கமிஷன் இலவசப் பஸ் பாஸ், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், 
சமத்துவபுரம், நமக்கு நாமே திட்டம், மாநில சுயாட்சித் தீர்மானம், பிற்படுத்தப் பட்டோர் மற்றும் தாழ்த்தப் பட்டோர் தனித்துறை, 

இலவசமாக சைக்கிள் ரிக்க்ஷா, இலவச டிவி,உழவர் சந்தைகள், மறுவாழ்வு இல்லங்கள், ஆகியவற்றை கொண்டு வந்தார்.

திட்டம்  2

மொழிப்போர் தியாகிகளு க்கும் ஓய்வூதியம் ,மே முதல் விடுமுறை .இளங்கலை, முதுகலைப் பட்டப் படிப்புத் தேர்வு, 

மேயருக்கு நேரடித் தேர்தல், சமூக சீர்திருத்தத்திற் காக தனி அமைச்சகம், மிகவும் பிற்படுத்தப் பட்டோருக்கு 20% இட ஒதுக்கீடு, 
மாணவ, மாணவியர் களுக்கு இலவச தொழிற் கல்வி, மெட்ராஸ் என்ற பெயரை சென்னை என மாற்றியது ஆகிய நடவடிக்கை களை செய்துள்ளார்.

திட்டம் 3

உள்ளாட்சியில் 33 விழுக்காடு மகளிருக்கு இடஒதுக்கீடு, மினிபஸ் திட்டம், டைடல் பூங்கா, மாநில திட்டக்குழு, 
ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவித் திட்டம், சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், 

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், டெஸ்மா சட்டம் ரத்து, பொறியில் கல்விக் கட்டணம் குறைப்பு, மதமாற்றத் தடைச் சட்டம் திரும்பப் பெற்றது, 

1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக உத்தரவு, தமிழ் கட்டாயப் பாடம், கண்ணகி சிலை திறப்பு ஆகியவற்றை செய்தார்.

திட்டம் 4
இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, விவசாயி களுக்கு இரண்டு ஏக்கர் நிலம்,பனைத் தொழிலாளர் வாரியம், 
மருத்துவம், கார் உற்பத்தி தொழிற்கூடங்கள் தொடங்க அனுமதி, தமிழைச் செம்மொழி,  கடல் சார் பல்கலைக் கழகம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம் ஆகிய வற்றை கொண்டு வந்தார். 

பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளில் 5% தனி இட ஒதுக்கீடு, ஆகியவற்றை செய்தார் .
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings