எவ்வளவு நேரம் ஆக்சிஜன் இல்லாமல் உயிரோடு இருக்கலாம்?

0
ஆக்சிஜன் இல்லாமல் மனிதன் சில நிமிடங்களே உயிர்வாழ முடியும். காரணம் ஆக்சிஜன் இல்லாமல் மூளையால் செயல்பட முடியாது. 
எவ்வளவு நேரம்  ஆக்சிஜன் இல்லாமல் உயிரோடு இருக்கலாம்?
நாம் சுவாசிக்கும் போது உள்ளே செல்லும் ஆக்சிஜனில் 20 சதவீதத்தை நமது மூளையே பயன்படுத்திக் கொள்கிறது. 

சுமார் 8 முதல் 10 வினாடிகள் மூளைக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் போனாலும் மனிதன் உணர்வற்ற நிலைக்குத் தள்ளப் படுவான். 

அடுத்த சில நொடிகளில் மூளையின் செல்கள் இறந்து மனிதன் மரண நிலைக்குத் தள்ளப் படுகிறான்.

இருப்பினும் குறைந்த வெப்ப நிலையில் மூளையானது மிக்குறைந்த ஆக்சிஜனையே உபயோகிக் கிறது. 

எனவே நீண்டநேரம் நடைபெறும் அறுவைச் சிகிச்சைகள் மிகக்குறைந்த வெப்ப நிலையில் செய்யப் படுகிறது. 
எவ்வளவு நேரம்  ஆக்சிஜன் இல்லாமல் உயிரோடு இருக்கலாம்?
மற்ற உறுப்புகள் ஆக்சிஜன் இல்லாமலும் சில மணி நேரம் செயல் படுகின்றன. 

எனவே தான் இறந்த மனிதனது மூளையைத் தவிர மற்ற சில உறுப்புகள், உறுப்பு மாற்று சிகிச்சைக்குப் பயன்படுத்தப் படுகின்றன.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings