நீலகிரி மாவட்டக் கிராமத்தின் அபாயக் குரல் - 'எங்களைக் காப்பாற்றுங்கள்' !

0
"இந்த நிலை தொடர்ந்தால் கரையோர வீடுகள் நிச்சயம் அடித்துச் செல்லப்படும். 
அரசு தான் எங்களை வெள்ளத்தி லிருந்து காப்பாற்ற வேண்டும்!"

``வெள்ளத்தி லிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள்!’’ - நீலகிரி மாவட்டக் கிராமத்தின் அபாயக் குரல்

கடும் வெள்ளத்தில் சிக்கி கேரளம் தத்தளித்துக் கொண்டிருக்க, தமிழகத்தின் ஆற்றுப் பகுதிகளிலும் 

அதன் கரையோரங் களிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கிப் போட்டு வருகிறது. 

மேட்டூர் அணைக்கு அடுத்த படியாக அதிக கொள்ளளவு கொண்டுள்ள அணையாகப் 

பவானிசாகர் திகழ்வதற்கு முக்கியக் காரணம் நீலகிரி மாவட்டத்தில் ஓடும் சிற்றாறுகள் தான். 

இந்தச் சிற்றாறுகளில் ஒன்று தான் எமரால்டு. கேரளாவில் வரலாறு காணாத மழை பெய்து வரும் நிலையில், 

அதை நெருங்கி அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தி லும் பலத்த காற்றுடன் மழை பெய்து கொண்டிருக் கிறது. 

இந்த நிலையில் எமரால்டு தடுப்பணையில் அதிக பட்சமாக நீர் தேக்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து கடந்த திங்கள் கிழமை அன்று அணையி லிருந்து 4,000 கன அடி நீர் திறக்கப்பட்டது. 

அதன் தொடர்ச்சி யாகவும் மழையின் காரணமாக வும் காட்டாறு போல அதிக அளவிலான தண்ணீர் அங்கு புரண்டோடு கிறது.


எமரால்டு பகுதியில் கரையோரம் உள்ள எம்.ஜி.ஆர் நகர் கிராமத்தில் 60 வருடங்க ளாக வசித்து வரும் மக்கள், தண்ணீரின் வேகத்தால் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர். 

அங்கு மொத்தம் 45 வீடுகள் உள்ளன. இதில் கரையோரம் உள்ள ஏழு வீடுகளின் நிலைமை மிகவும் மோசமாகும் என அங்குள்ள மக்கள் அஞ்சுகின்றனர். 

பாலத்துக்கு அருகில் அமைந்துள்ள கோயிலுக்குள் ஆற்று நீர் சூழ்ந்துள்ளது. 

கரையோரம் இருக்கும் வீடுகளின் வாசல் பகுதிகளும் நீர்ப்பெருக்கால் அடித்துச் செல்லப் பட்டுள்ளது. 

இந்த நிலை அங்கு வசிக்கும் மக்களின் வீடுகளுக்கும் நிகழ்ந்து விடுமோ என்று பயந்து வாழ்ந்து வருகிறார்கள்.

வெள்ளத்து க்குப் பயந்து 10 வீடுகளின் குடும்பத்தினர் தங்களின் சொந்த பந்தங்களின் வீடுகளுக்குச் சென்று விட்டனர். 

சிலர் இடம் மாற்றத்து க்குத் தயாராகி இருக்கிறார்கள். இந்நிகழ்வை தவிர, கன மழையால் 

சில வீடுகளின் மீது அருகில் உள்ள கட்டடங்களின் பகுதிகள் சரிந்து காணப்படு கின்றன. 

இவ்வாறு மழை தொடர்ந்து பெய்தால் காட்டாற்றின் வேகம் அதிகரித்து, விளைவுகள் எதிர்பார்க்க முடியாத அளவு இருக்கும் என அஞ்சப் படுகிறது.

எம்.ஜி.ஆர் நகர் பொதுமக்கள், இது தொடர்பான புகாரை எமரால்டு காவல் துறைக்கும், வட்டாட்சியர் அலுவலக த்துக்கும் தெரிவித்துள்ளனர். 

ஆனால், வட்டாட்சியர் அலுவலக த்தில் பணிபுரியும் அதிகாரிகள் மட்டும் பார்வை யிட்டுச் சென்றதாகக் கூறுகிறார்கள். 

மாவட்ட ஆட்சியர் வருவதாகத் தெரிவித்த அப்பகுதி மக்கள், தங்களின் தேவைகளை விண்ணப்ப மாக எழுதிக் காத்திருந்த நிலையில், ஆட்சியர் பார்வையிட வரவில்லை யாம். 
இது குறித்து தங்கள் ஆதங்கத்தை யும் வெளிப் படுத்தினர் கரையோரம் வசிக்கும் மக்கள்.

மாவட்ட ஆட்சியருக்கு எழுதிய விண்ணப்பத்தில், குழந்தை களுடன் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக வும், 

தற்போது அணைத் திறப்பால் தண்ணீர் வீடுகளின் உட்பகுதிகளைச் சேதப்படுத்திச் செல்வதாக வும், 

அவர்கள் வசிக்க முடியாத சூழ்நிலை உருவாகி விட்டதாகவும் எழுதி யுள்ளனர். 


அவர்கள் வசிக்கும் வீடுகளுக்கு அரசு பட்டா உள்ளதாக அவர்கள் குறிப்பிட் டுள்ளனர். 

மேலும், எம்.ஜி.ஆர் நகரில் சர்வே 40-லிருந்து 47 வரை அரசாங்க நிலம் உள்ளதாக வும் கூறியுள்ளனர். 

எனவே, அங்கு வசிக்கும் மக்கள் மீது கருணைகாட்டி 15 வீடுகளு க்கும் மாற்று இடம் தருமாறு கோரிக்கை வைக்கின்றனர்.

இதைப் பற்றி பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரித்த போது, "தண்ணீரின் நிலை அதிகரித்து வருவதால் அணையைத் திறந்து விடுகின்றனர். 

குந்தா அணையில் தண்ணீர் தடுப்பு ஏற்பட்டதால் நேற்றைய முன்தினம் 5 மணி நேரம் 

அணையைத் திறக்காமல் வைத்திருந் தார்கள், பிறகு நேற்று மாலையில் அணை மீண்டும் திறக்கப் பட்டது. 

அணையைத் திறக்கும் நேரத்தில் மின்சார வாரியம் சிறு அறிவிப்பை மட்டும் தந்தது. 

இந்த நிலை தொடர்ந்தால் கரையோர வீடுகள் நிச்சயம் அடித்துச் செல்லப்படும். 

அரசு  தான் எங்களை வெள்ளத்தி லிருந்து காப்பாற்ற வேண்டும்" என்று வருத்தப்படு கின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings