வெள்ளக்காடு குடிக்கத் தண்ணீர் இல்லை - கிராம மக்கள் வேதனை !

0
கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு செல்லும் வெள்ளத்தால் கடந்த 5 நாள்களாக சிதம்பரம் அருகே உள்ள 
அக்கரை ஜெயங்கொண்ட பட்டினம், திட்டுக்காட்டூர், கீழகுண்டபாடி ஆகிய 3 கிராமங்கள் தண்ணீரால் சூழப்பட்டு தனித் தீவாக மாறியுள்ளது. 

இந்த கிராமங்கள் கொள்ளிடம், பழைய கொள்ளிடம் ஆகிய ஆறுகளின் இடையே அமைந்துள்ள தால் இருபுறமும் தண்ணீரால் நீரால் சூழப்பட் டுள்ளது. 

இந்த 3 கிராமங்களில் வசிக்கும் சுமார் 900 குடும்பங்கள் இடுப்பளவு தண்ணீரில் மாடிகளிலும், மேடான பகுதிகளிலும் வசித்து வருகின்றனர்.

விவசாயம் மற்றும் விவசாயக் கூலி தொழிலாளர் களான இந்த கிராம மக்கள், தங்கள் வீடுகளில் ஆடு, மாடு, கோழி என கால்நடை களை வளர்த்து வருகின்றனர். 

கடந்த 5 நாள்களுக்கு முன்பு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்ட போதே அதிகாரிகள் இவர்களை படகு மூலம் மீட்டு 


பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க அனைத்து ஏற்பாடு களையும் செய்த நிலையில், கிராம மக்கள் தாங்கள் வளர்க்கும் ஆடு, மாடு, கோழி போன்ற

கால்நடை களைத் தனியாக விட்டு, விட்டு வர மாட்டோம் எனக் கூறி வெள்ளம் சூழ்ந்த கிராமத்தி லேயே வசித்து வருகின்றனர்.

அவர்களுக்கு வருவாய்த் துறையினர் படகு மூலம் உணவு, குடி நீர் ஆகிய வற்றை வழங்கி வருகின்றனர். 

ஆனால், கடந்த 3 நாள்களாக கொள்ளிடம் ஆற்றில் விநாடிக்கு 2 லட்சம் கன அடி தண்ணீர் செல்வதால் படகில் சென்று உணவு, குடிநீர் வழங்குவதும் சிரமாக உள்ளது. 

இதனால், இவர்கள் சரியாக உணவு, குடி நீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து அக்கரை ஜெயங்கொண்ட பட்டினம் கிராமத்தை சேர்ந்த ரகுநாதனிடம் பேசினோம். 

`எங்கள் ஊரை சுற்றி வெள்ளம் சூழ்ந்து நிற்கிறது. ஆனா குடிக்கத் தண்ணீர் இல்லை. 

அரசு அதிகாரிகள் உணவு தருகிறார்கள். ஆனால், நேரத்திற்கு வரவில்லை. 

இளைஞர் களாகிய நாங்கள், நல்ல உள்ளங்களின் உதவியைப் பெற்று எங்களால் ஆன உதவியை கிராம மக்களுக்குச் செய்து வருகிறோம்.

மின்சாரம் இல்லை, ஊரில் இடுப்பளவு தண்ணீர் சூழ்ந்திரு தாலும் எங்களின் வாழ்வாதர மாகிய ஆடு, மாடு, கோழி போன்ற 

கால்நடை களை அநாதையாக இங்கு விட்டு விட்டு நாங்கள் மட்டும் பாதுகாப்பாக வெளியேற மனமில்லாமல் வீட்டின் மாடிகளிலும், 

மேடான பகுதியிலும் கிடைக்கும் உணவை சாப்பிட்டு வாழ்ந்து வருகிறோம்’’ என்றார் வேதனையுடன்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings