கர்நாடக மாநிலம், தும்கூரு நெடுஞ் சாலையில் ஒரு கணவன் மனைவி, தங்கள் 3 வயது குழந்தையுடன் பைக்கில் சென்றனர்.
குழந்தையை பெட்ரோல் டேங்கின் மீது அமரவைத்து இருந்தனர். அப்போது, இவர்கள் சென்ற பைக்குக்கு முன்னே சென்ற மற்றொரு பைக் திடீரென பிரேக் போட்டு நின்றவுடன்,
இவர்களால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல், அந்த பைக்கின் மீது மோதி விட்டனர்.
இதில் மோதிய வேகத்தில் பைக்கில் இருந்த கணவனும், மனைவியும் கீழே விழுந்தனர்.
ஆனால், பைக் கீழே விழாமல், அதே வேகத்தோடு பைக்கின் பெட்ரோல் டேங்கில் அமர்ந்திருந்த குழந்தையோடு சாலையில் ஓடத் தொடங்கியது.
சாலையில் லாரி, கார் போன்றவை சென்ற போதிலும், எதிலும் மோதி விடாமல் ஏறக்குறைய 300 மீட்டர் தொலைவு அந்த பைக் ஓடியது.
இந்தக் காட்சியை காரில் சென்ற கார்திக் கவுடா என்பவர் தனது செல்போன் கேமிராமூலம் படம் பிடித்துள்ளார்.
300 மீட்டர் தொலைவு சென்ற அந்த பைக் சாலையின் தடுப்புச் சுவரில் விழுந்து கீழே விழுந்தது.
இதில் குழந்தை தடுப்புச் சுவருக்கு இடையே வளர்க்கப் பட்டிருந்த புல்வெளியில் விழுந்ததால், காயமின்றி உயிர் பிழைத்தது. இது அதிசய மாகவே பார்க்கப் படுகிறது.
அந்த குழந்தையின் பெற்றோர்களு க்கு லேசான காயம் ஏற்பட்டது. மற்றொரு பைக்கில் வந்தவர்களு க்குப் பலத்த காயம் ஏற்பட்டது.
இது குறித்து போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.
Thanks for Your Comments