கருணாநிதி மறைவுக்கு ஒரு வாரம் அரசு முறை துக்கம் அனுசரிக்கப் படுகிறது. என்றும் நாளை அரசு விடுமுறை என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.
கருணாநிதி கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார்.
இந்நிலையில் அவரது உடல் நிலையில் நேற்று முதல் பின்னடைவு ஏற்பட்டது.
இதை யடுத்து வயது மூப்பின் காரணமாக அவரது உடல் சிகிச்சைக்கு ஒத்துழைக் காமல் இன்று மாலை 6.10 மணிக்கு மரணமடைந்தார்.
இவரது மறைவுக்கு ஒரு வாரம் அரசு முறை துக்கம் அனுசரிக்கப் படுகிறது.
இதையடுத்து தமிழகத்தில் நாளை பொது விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதனால் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங் களுக்கு நாளை விடுமுறை என அறிவிக்கப் பட்டுள்ளது.
இதே போல் புதுவையில் பொது விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.
அரைக் கம்பத்தில் திமுக கொடி: கருணாநிதியின் வீட்டில் அரைக் கம்பத்தில் திமுக கொடிகள் பறக்கின்றன.
Thanks for Your Comments