திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிறந்து சில நாட்களே ஆன குழந்தை தனித்து விடப்பட்டது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக் கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
அப்படி வரும் பக்தர்களுக்கு பாதுகாப்புகள் பலப்படுத்தப் பட்டுள்ளன. ஆனால் அந்த பாதுகாப்பு களையும் மீறி அவ்வப்போது சில சம்பவங்கள் நடைபெறு கின்றன.
அப்படி சமீபத்தில் நடந்தது தான் திருப்பதி வந்திருந்த பக்தரின் குழந்தை கடத்தப் பட்டது.
பின்னர் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் அந்தக் குழந்தை மீட்கப்பட்டது. தற்போதும் அதே போல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நேற்று திருப்பதியில் உள்ள தலைமுடி காணிக்கை செலுத்தும் இடத்தில் குடைக்கு கீழ் ஒரு குழந்தை அழுகின்ற சத்தம் கேட்டுள்ளது.
சத்ததை கேட்டுச் சென்று பார்த்த அருகிலிருந் தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தையை யாரோ விட்டுச் சென்றது தெரிய வந்தது.
யாரும் இல்லாத நிலையில் பசியால் அந்தக் குழந்தை வெகுநேரமாக அழுதுள்ளது.
உடனடியாக குழந்தையை மீட்டவர்கள் அதிகாரிகளு க்கு தகவல் தெரிவித் துள்ளனர்.
விரைந்து வந்த குழந்தைகள் நலக் காப்பக அதிகாரிகள் குழந்தையை மருத்துவ மனைக்குக் கொண்டு சென்று முதலுதவி அளித்தனர்.
முதல் கட்ட விசாரணை யில் மூதாட்டி ஒருவர் குழந்தையை விட்டுச் சென்றதாக அருகிலிருந் தவர்கள் கூறி யுள்ளனர்.
எனினும் சிசிடிவி காட்சிகள் மூலம் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Thanks for Your Comments