கேரளா வெள்ளத்திற்கு தமிழக அரசு காரணமல்ல - சுப்ரீம் கோர்ட் !

0
கேரளாவில் இந்த மாத தொடக்கத்தில் வரலாறு காணாத மழை பெய்தது. 
இதனால் அங்குள்ள ஆறுகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், கேரள மாநிலமே வெள்ளக்காடாக மாறியது. 

அந்த மாநிலத்தில் உள்ள பெரிய அணையான இடுக்கி அணை 26 ஆண்டுகளு க்கு பிறகு இந்த ஆண்டு தான் நிரம்பியது.

மேலும் முல்லைப் பெரியாறு அணையும் நிரம்பிய தால், அதில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீரும் இடுக்கி அணைக்கு சென்றது.

இதனால் இடுக்கி அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்ட தால், இடுக்கி மாவட்டத்தில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி உயரத்துக்கு தண்ணீர் தேக்கி வைக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது. 

அதன்படி, நீர்மட்டம் 142 அடியை எட்டியதும், அணையில் இருந்து உபரி நீரை தமிழகம் திறந்து விட்டது.

இதற்கிடையே, முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு கருதி, அதன் உச்ச நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க

உத்தரவிடக் கோரி, ஜாய் ரஸ்ஸல் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த 17-ந் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது இருதரப்பு வாதங்களை யும் கேட்ட நீதிபதிகள், கேரளாவில் மேற்கொள்ளப்படும் மீட்புப்பணிகள், 

புனரமைப்பு பணிகள், மக்களின் மறுவாழ்வுக் கான நடவடிக்கைகள் குறித்து அந்த மாநில தலைமைச் செயலாளர் பிரமாண பத்திரம் 

தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தர விட்டு, வழக்கு விசாரணையை 24-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இந்தநிலையில், கேரள அரசின் தலைமைச் செயலாளர் டாம் ஜோஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.


அந்த பிரமாண பத்திரத்தில்

கடந்த 15-ந் தேதி நள்ளிரவில் முல்லைப் பெரியாறு அணையின் மதகுகள் மூலம் திடீரென்று இடுக்கி அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. 

மேலும் இடுக்கி அணையில் இருந்தும் நீர் திறந்து விட வேண்டிய கட்டாயத்து க்கு கேரள அரசு உள்ளானது. 

இதன் காரணமாக கேரளாவில் பெருவெள்ளம் ஏற்பட்டது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டிய உடனேயே, தமிழகம் கொஞ்சம், 

கொஞ்சமாக தண்ணீரை திறந்து விட்டு இருந்தால் இவ்வளவு சேதம் ஏற்பட்டு இருக்காது. 

வெள்ளசேதம் ஏற்பட்டதற்கு தமிழகம் திடீரென்று தண்ணீரை திறந்து விட்டதும் ஒரு காரணம் ஆகும். என கூறி இருந்தது.

இதற்கு இன்று தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப் பட்டது அதில் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு தமிழக அரசு காரணமல்ல. 

இடுக்கி பகுதி வெள்ளத்திற்கு கேரள அரசுதான் காரணம் முல்லைப் பெரியாறு அணையின் 13 மதகுகளை திறந்து விட்டது கேரள அரசுதான் என கூறி உள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings