கலிபோர்னியா வில் உள்ள மால் ஒன்றில், விமானம் ஒன்று விழுந்து விபத்திற்கு உள்ளாகி உள்ளது. மாலின் கார் பார்க்கிங் பகுதியில் விமானம் தரையிறங்கி உள்ளது.
இந்த வருடம் விமானம் விபத்திற் கான வருடம் என்று கூட கூறலாம். அந்த அளவிற்கு உலகம் முழுக்க விமான விபத்துகள் தினமும் நடக்கிறது.
நேற்றும் அமெரிக்காவில் வித்தியாசமான விமான விபத்து ஒன்று நடந்துள்ளது.
கலிபோர்னியாவின் சான்டா அனா பகுதியில் உள்ள சவுத் கோஸ்ட் பிளாசாமாலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது அங்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
வேகமாக மோதியது
மக்கள் அந்த மாலின் உள்ளே பொருட்கள் வாங்கி கொண்டிரு க்கும் போதே, விமானம் நேரடியாக உள்ளே வந்து வேகமாக தரையிறங்கி இருக்கிறது.
அங்கு கீழ் இருந்த கார் பார்க்கிங் பகுதியில் விமானம் இறங்கி யுள்ளது. வேகமாக மோதியதில் மாலின் சில பகுதிகள் இடிந்து தரை மட்டமாகி விழுந்தது.
பலி எண்ணிக்கை
இந்த சம்பவத்தால் விமானத்தில் இருந்த 5 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் ஒருவர் மோசமான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு இருக்கிறார்.
மாலில் இருந்த நபர்களுக்கு எதாவது காயம் ஏற்பட்டு இருக்கிறதா என்பது குறித்த தகவல் வெளியாக வில்லை. 3 கார் மோசமாக சேதம் அடைந்துள்ளது.
காரணம் என்ன
அந்த சிறிய விமானம் பறந்து செல்லும் போதே எதோ பிரச்சனை ஒன்று ஏற்பட்டு இருக்கிறது.
இதனால் அந்த விமானத்தை அவசரமாக தரையிறக்க அந்த மாலுக்கு அருகில் உள்ள, விமான நிலையம் ஒன்றில் அனுமதி வாங்கி இருக்கிறார்கள்.
ஆனால் விமானம் தரையிறக்கப் படும் முன், மாலில் உள்ள பார்க்கிங் பகுதியில் மோதி இருக்கிறது.
விசாரணை
Tags:
Thanks for Your Comments