ஓய்வு கொண்ட கருணாநிதியின் கடைசி ஆசை !

0
ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக் கிறான் என்று தனது கல்லறையில் எழுதுமாறு 
கருணாநிதி தனது குடும்பத்தினர் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் கூறியுள்ளார். 

மு. கருணாநிதி என்பவர் அரசியல், நாடகம், வசனம், திரைக்கதை. எழுத்து, கதை, காவியம் என பன்முகத் திறமைகளை தன்னகத்தே வைத்துள்ளவர். 

இவர் இதுவரை ஏராளமான வசனங் களை எழுதி யுள்ளார். அதில் பராசக்தி வசனங்கள் பிரபலமானவை. 

14 வயதில் தொடங்கிய அரசியல் பயணத்தை தனது இறுதி மூச்சு வரை நேரடியாக செயல்பட முடியா விட்டாலும் 

தனது ஆலோசனை களை வழங்கியபடி ஓய்வெடுக்காமல் உழைத்தவர்.

கல்லறை ஆசை

ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக் கிறான்' என்று தனது கல்லறையில் எழுத வேண்டும் என்று கருணாநிதி 


தனது விருப்பத்தை தனது குடும்பத்தி னரிடமும், கட்சி நிர்வாகி களிடமும் தெரிவித்துள்ளார்.

சாவதே இல்லை..

வீரன் ஒருமுறை தான் சாவான், கோழை பலமுறை சாவான்' என்பது புகழ் பெற்ற பொன்மொழி. 

அதை வீரன் சாவதே இல்லை. கோழை வாழ்வதே இல்லை' என்று மாற்றிப் பிரபலப் படுத்தியவர் கருணாநிதி என்று சொன்னால் அது மிகையில்லை. கிரிக்கெட்
கருணாநிதிக்கு சிறு வயதில் பிடித்த விளையாட்டு ஹாக்கி. ஆனால், அவருக்கு கிரிக்கெட் என்றால் உயிர் என்று கூறுகிறார்கள். 

ஒரு நாள், தொடர் கிரிக்கெட் பற்றி, தனது கட்சி நிர்வாகி களுடன் மிக ஆர்வமாக விவாதிப்பாராம். 

முடியாத நேரத்திலும் தனது பேர பிள்ளைகளுக்கு பந்துகளை போட்டு விளையாடுவார்.

சைவம்

ஆரம்ப காலத்தில் அசைவ உணவுகளை விரும்பிச் சாப்பிட்ட கருணாநிக்கு நாளடைவில், செரிமான பிரச்னை ஏற்படவே, சைவத்திற்கு மாறி விட்டார். 

தினமும் தனது சாப்பாட்டில் ஏதாவது ஒரு வகைக் கீரையை சேர்த்துக் கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings