திருச்சி மணப்பாறையை அடுத்த ரெட்டியப் பட்டியைச் சேர்ந்த விமல் ராஜ் என்பவர், தனது நண்பர்கள் 3 பேருடன்
நேற்று இரு சக்கர வாகனத்தில் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை யில் சென்றுள்ளார்.
அவர்கள் விராலிமலை அருகே உள்ள லஞ்சம் மேடு பகுதியில் சென்று கொண்டிருந்த போது,
அந்த வழியே வந்த ஆம்னி பேருந்து அதிவேகமாக மோதியதில், அமல்ராஜ் வந்த பைக்,
பேருந்துக்கு அடியில் சிக்கியதால் சிறிது தூரம் இழுத்துச் செல்லப் பட்டனர்.
இந்த விபத்தில், விமல்ராஜ் உள்ளிட்ட நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
அதையடுத்து, கீழே விழுந்த விமல்ராஜின் இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த விராலிமலை போலீஸார், வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை செய்தனர்.
விசாரணை யில், விபத்தில் பலியான நான்கு பேரும் ரெட்டியப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும்
அவர்களின் பெயர் ராஜசேகர், குணசேகர், விமல்ராஜ், அருண் என்பதும் தெரிய வந்துள்ளது.
இதில், ராஜசேகரும் குணசேகரனும் அண்ணன் தம்பி என்பது குறிப்பிடத் தக்கது.
ஒரே மோட்டார் சைக்கிளில், ரெட்டியப்பட்டி கிராமத்தில் இருந்து விராலிமலை அருகே லஞ்சமேடு பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலு க்கு சாப்பிடச் சென்றனர்.
ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு திரும்பிய போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
அண்ணன் தம்பி உட்பட ஒரே கிராமத்தைச் சேர்ந்த நான்கு நண்பர்கள் விபத்தில் பலியான சம்பவம் திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதே போல, திருச்சி, மண்ணச்ச நல்லூர் பகுதியைச் சேர்ந்த மோகன், அதே பகுதியைச் சேர்ந்த
செந்தாமரைக் கண்ணன், சுப்பிரமணியன் உள்ளிட்ட மூன்று பேரும் சரக்கு ஆட்டோவில்,
மண்ணச்ச நல்லூரில் இருந்து அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு காரைக்குடி க்குச் சென்று கொண்டிருந்தனர். சரக்கு ஆட்டோவை மோகன் ஓட்டிவந்தார்.
அவர்கள் வந்த வாகனம், புதுக்கோட்டை அருகே கரப்பட்டி என்னும் இடத்தில் சென்று கொண்டிருந்த போது, ஆட்டோவின் முன்புற டயர் திடீரென வெடித்தது.
இதனால் நிலை தடுமாறிய ஆட்டோ, எதிரே வந்த ஒரு லாரிமீது மோதியது.
இந்த விபத்தில் ஆட்டோவை ஓட்டிவந்த மோகன், செந்தாமரைகண்ணன், சுப்பிரமணியன் ஆகியோர் படுகாய மடைந்தனர்.
ஆட்டோவில் இருந்த அரிசி மூட்டைகள் சாலையில் விழுந்தன.
இந்த விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த லாரி டிரைவர், லாரியில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடினார்.
ஓடும் போது, அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால், சாலையில் விழுந்து பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த திருக்கோகர்ணம் போலீஸார், சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
படுகாயமடைந்த மோகன், செந்தாமரை கண்ணன், சுப்பிரமணியன் ஆகிய மூன்று பேரையும்
சிகிச்சைக் காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் மாரடைப்பில் பலியானவர், திருவண்ணாமலை மாவட்டம் வடவாளம் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பது தெரிய வந்தது.
அதை யடுத்து, லாரி டிரைவர் சேகரின் உடலை போலீஸார் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக் காக
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், காயமடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த மோகன், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
அடுத்தடுத்து விபத்துகளில் பலியானவர் களின் எண்ணிக்கை எட்டாகக் கூடியதால், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் மட்டு மல்லாமல்,
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை பகுதியிலும் பெரும் சோகம் நிலவியது.
Thanks for Your Comments