திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்ய
அரசு அனுமதிக்க வேண்டும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி இயற்கை எய்தியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதியின் உடலை
மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை.
மெரினா கடற்கரையில் உள்ள, அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய அனுமதி அளிக்க முடியாது என்று அரசு கூறியுள்ளது.
காமராஜர் நினைவகத்தில் இடம் ஒதுக்க தயார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் அண்ணா நினைவிடத்தில் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய
அனுமதி அளிக்க வேண்டும் என்று ஸ்டாலின் முதல்வரிடம் மனு அளித்து இருக்கிறார்.
ஏற்கனவே நேரடியாக சந்தித்து கோரிக்கை வைத்த ஸ்டாலின் தற்போது மனு அளித்துள்ளார்.
அவர் தனது மனுவில், தார்மீக அடிப்படையில் கருணாநிதி உடலை புதைக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும்.
முக்கிய தலைவர் ஒருவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இடம் அளிக்க வேண்டும்.
அண்ணா இருக்கும் இடத்திற்கு அருகிலேயே கருணாநிதியை புதைக்க இடமளிக்க வேண்டும்.
ஒரு இறுதி மரியாதையாக அரசு இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும், என்று ஸ்டாலின் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
Thanks for Your Comments