ட்ரக்கியாஸ்டமி முதல் உயிர் பிரிந்தது வரை - நடந்தது என்ன?

0
திமுக தலைவர் கருணாநிதி யின் உடலில் கடந்த 2 வாரமாக பிரச்சனை இருந்தது. 
அவருக்கு புதிய ட்ரக்கியாஸ்டமி கருவி பொறுத்தப் பட்டதில் இருந்தே, உடல் நிலையில் பிரச்சனை இருந்தது. 

அவருக்கு கடந்த 2 வாரமாக கடுமையான சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அவருக்கு சிகிச்சை பலனளிக் காமல் கடைசி நேரத்தில் உயிர் பிரிந்துள்ளது. 

வயது முதிர்ச்சி காரணமாக தற்போது அவர் மரணம் அடைந்து இருக்கிறார். அவரது உடல் நிலை இடை யிடையே சரியான நிலையை அடைந்தது குறிப்பிடத் தக்கது.

ட்ரக்கியாஸ்டமி கருவி

சுவாசிப்பதில் பிரச்சனை இருந்த கருணாநிதி ட்ரக்கியாஸ்டமி என்று கருவி மூலம் சுவாசித்து வந்தார். அந்த கருவிதான் அவர் சுவாசிக்க உதவி வந்தது.

ஆனால் அந்த கருவியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, மூன்றாவது முறையாக, அந்த கருவி கடந்த வாரம் மாற்றப்பட்டது.

8 நாட்களுக்கு முன்பு மாற்றப் பட்டது. அதன்பின் கருணாநிதி வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.

காய்ச்சல் ஏற்பட்டது

இந்த நிலையில்தான் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு இருக்கிறது. சரியாக கடந்த 25ம் தேதி அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. 


ட்ரக்கியாஸ்டமி கருவி வைத்த பின் அவருக்கு அதிக அளவில் மருந்துகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இதனால் அந்த மருந்துகளின் பக்க விளைவாக காய்ச்சல் ஏற்பட்டு இருக்கிறது.

சிறுநீரக நோய் தொற்று

இந்த நிலையில் 26ம் தேதி மாலை அவருக்கு சிறுநீரக நோய் தோற்று ஏற்பட்டது.

இதனால் தான் அவர் உடல் நலிவு அடைந்தது. அவருக்கு வீட்டிலேயே வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

அப்போது, காவேரி மருத்துவமனை அளித்த அறிக்கையில் கருணாநிதிக்கு உடல்நிலை கொஞ்சம் நலிவுற்றதாக கூறப்பட்டது.

8 மருத்துவர்கள்

இந்தநிலையில் தான் அவருக்கு 8 மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். சிறுநீரக நோய் தொற்றை கட்டுப்படுத்த, தீவிரமான சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனால் அவருக்கு நோய் தொற்று கொஞ்சம் கட்டுக்குள் வந்தது. அதே போல் அவரது உடல் நிலையும் கொஞ்சம் சரியானது.

மீண்டும் பிரச்சனை

இந்த நிலையில் 27ம் தேதி முழுக்க அவர் உடல்நலம் நன்றாக இருந்தது. ஆனால் 27ம் தேதி நல்லிரவில் அவருக்கு இரத்த அழுத்தத்தில் பிரச்சனை ஏற்பட்டது.

28ம் தேதி அதிகாலை 1.12 மணிக்கு அவர் வீட்டில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் காவிரி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

முதல் முறையாக அவர் ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டார். 
அவர், காவிரி மருத்துவ மனையில் 4வது மாடியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்தில் அனுமதிக்கப் பட்டார்.

8 மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.

உடல்நிலை சரியானது

இந்த நிலையில் மருத்துவ மனையில் அவரது உடல்நிலை இன்னும் மோசமாகி இருக்கிறது.

பின் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது. 3.30 வரை அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவரது ரத்த அழுத்தத்தில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. பல்ஸ்ஸும் பெரிய அளவில் குறைந்து இருக்கிறது.

28ம் தேதி அவரது உடல் அதிகாலை 3.40 மணிக்கு கொஞ்சம் சரியாகி இருக்கிறது. உடலில் ரத்த ஓட்டம் அப்போது தான் சரியாகி உள்ளது.

இதனால் மீண்டும் அவர் உடல்நிலை சரியாக இருக்கிறது என்று காவிரி மருத்துவமனை தெரிவித்தது. அவர் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார் என்று கூறப்பட்டது.

நன்றாகவே இருந்தார்

இந்த நிலையில் கடந்த 40 மணி நேரமாக அவரது உடல் நிலை மிகவும் நன்றாக இருந்தது.

முக்கியமாக 29 ம் தேதி மாலை நான்கு மணிக்கு கருணாநிதி காவேரி மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் புகைப்படம் வெளியானது.

துணை குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடு அவருடன் நிற்கும் போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது.

இதில் சுவாச குழாய் இணைப்பு இன்றி இயல்பாக இருந்தார் கருணாநிதி. அதே போல் அவருக்கு முறையாக மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப் பட்டது.

மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட பின் முதல் முறையாக புகைப்படம் வெளியானது.

மோசம்

இந்த நிலையில் 29ம் தேதி இரவு 8 மணிக்கு அவரது உடல்நிலை மீண்டும் மோசமானது. தொடர்ந்து அவரது உடல்நிலை நலிவடைந்தது.

இதனால் காவேரி மருத்துவ மனைக்கு எல்லோரும் வருகை புரிந்தனர். வரிசையாக கருணாநிதி குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் வந்தனர்.

அறிக்கை

அதன்பின் காவேரி மருத்துவமனை 29ம் தேதி இரவு 11 மணிக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில் கருணாநிதியின் உடல் உறுப்புகள் மீண்டும் சீராகி வருகிறது. அவரது உடலில் பிரச்சனை ஏற்பட்டது. 


ஆனால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின் கருணாநிதியின் உடல் நிலை மீண்டும் சீராகி வருகிறது என்று கூறப்பட்டது.

நல்ல உடல் நிலையில் இருந்தார்

இந்த நிலையில் தான் அவரது உடல் நிலையில் ஒரு வாரம் நல்ல ஆரோக்கியம் நீடித்தது.

சரியாக சொல்ல வேண்டும் என்றால் ஒருவாரம் அவரது ஆரோக்கியம் நீடித்தது. சக்கர நாற்காலியில் உட்காரும் நிலைக்கு அவர் சென்றார்.

மிக மோசம்

இந்த நிலையில் சக்கர நாற்காலியில் உட்காரும் அளவிற்கு உடல் நிலை சரியான கருணாநிதி, மீண்டும் மோசமான நிலையை அடைந்தார்.

இந்த முறை அவருக்கு கல்லீரல் நோய் தொற்றும் கூடுதலாக ஏற்பட்டது.

இதனால் அவர் உடல் நிலை மொத்தமாக சுணக்கம் ஏற்பட்டு நலிவடைந்து இருக்கிறது.

மரணம் அடைந்தார்

இந்த நிலையில்தான் அவரது உடல் நிலையில் மீண்டும் இன்று நலிவு ஏற்பட்டது. தொடர்ந்து அவரது உடலில் பிரச்சனை நீடித்தது. 
அதன்பின் சிகிச்சை பலனளிக்காத அவர், மரண மடைந்ததாக தெரிவிக்கப் பட்டது.

தொடர்ந்து அவர் உடல்நிலை நல்விடைந்த காரணத்தால் அவரது உயிர் பிரிந்தது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings