சீனா உலகின் மிக உயரமான மின் கோபுரங்களை அமைக்கும் திட்டத்தை ஆரம்பித்து இருக்கிறது. பல திட்டங்களை மனதில் வைத்து இந்த கோபுரத்தை அந்நாடு அமைக்கிறது.
ஆசியாவிலேயே மிக அதிக பரப்பளவை கொண்ட நாடுகளின் பட்டியலில் ரஷ்யா, கனடா ஆகிய நாடுகளுக்கு அடுத்த படியாக சீனா உள்ளது. பரப்பளவின் படி சீனா மூன்றாவது பெரிய நாடாக உள்ளது.
சீனப் பொருளாதாரத் தில் பல நாடுகளை பின்னுக்கு தள்ளியது அனைவரும் அறிந்த ஒன்று தான். கடந்த சில வருடங்களில் அந்நாடு பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது.
இந்நிலையில், உலகின் மிக உயரமான மின்கோபுரம் அமைக்கும் பணிகளை சீனா தொடங்கி யுள்ளது.
ஷிஜியாங் (Zhejiang) மாகாணத்தில் உள்ள சௌஷான் நகரத்தில் (Zhoushan) இந்த மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
சுமார் 380 மீட்டர் உயரத்திற்கு அமைக்கப்பட்டு வரும் இந்த மின் கோபுரங்களில், தற்போது 300 மீட்டர் உயரத்திற் கான கட்டுமானப் பணியில் அந்நாட்டு பொறியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது அமைக்கப்பட்டு வரும் இரு மின் கோபுரங்களு க்கு இடையே எந்த பிடிமானமும் இல்லாமல் ஏறத்தாழ 2 ஆயிரத்து 656 மீட்டர் நீளத்திற்கு வயர்கள் கொண்டு செல்லப் படுகின்றன.
இது தான் உலகிலேயே அதிக தூரம் பிடிமானம் இல்லாமல் செல்லும் வயர்கள் ஆகும். இந்தக் மின் கோபுரத்தின் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு நிறைவடையும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.
இதை மக்கள் அதிக அளவில் எதிர்பார்த்து காத்துள்ளனர். பல திட்டங்களை மனதில் வைத்து இந்த கோபுரத்தை அந்நாடு அமைக்கிறது. ஆனால் அதுகுறித்த விவரங்களை வெளியிடவில்லை.
Thanks for Your Comments