மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரீனா கடற்கரையில் இடம் வழங்க தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
கருணாநிதியின் உடலை மெரீனா கடற்கரையில் அண்ணாவின் சமாதிக்கு அருகில் அடக்கம் செய்ய திமுக அனுமதி கோரியது.
இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் நேரில் சந்தித்து அனுமதி கோரினர்.
ஆனால், பார்க்கலாம் என்று மட்டும் பதில் தந்து அனுப்பி வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி.
இந் நிலையில் அந்த இடத்தைத் தர முடியாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மெரீனாவுக்கு பதில் அண்ணா பல்கலைக் கழகத்துக்கு எதிரே காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கம் அரசு நிலத்தை ஒதுக்க தயாராக இருப்பதாக
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அறிக்கை வெளியிட் டுள்ளார்.
மெரீனாவில் அடக்கம் செய்ய பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாலும் சட்டச் சிக்கல்கள் இருப்பதாலும் அங்கு இடத்தை ஒதுக்க முடிய வில்லை என்று கிரிஜா தெரிவித்துள்ளார்.
Thanks for Your Comments