நாட்டிலேயே பஞ்சாபில் மிக உயரமான கொடிக் கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட் டுள்ளது.
மூன்றரை கோடி ரூபாய் செலவில் 360 அடி உயர கொடிக் கம்பத்தில் இந்த தேசியக் கொடி பறக்க விடப்பட் டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள அட்டாரி சர்வதேச எல்லைப் பகுதியில் இந்தியாவின் மிக உயரமான மூவர்ண கொடி பறக்க விடப்பட் டுள்ளது.
360 அடி உயரத்தில் அமைக்கப் பட்டுள்ள கொடிக் கம்பத்தில் இந்தியாவின் மிக பெரிய மூவர்ண கொடி ஏற்றப் பட்டுள்ளது.
இந்த தேசியக்கொடி 120 அடி நீளமும் 80 அடி அகலமும் கொண்டது ஆகும்.
இந்த தேசியக்கொடி நேற்று முதல் முறையாக பறக்க விடப்பட்டது. மத்திய அமைச்சர் அனில் ஜோஷி இதனை பறக்கவிட்டார்.
3.5 கோடி ரூபாய் செலவில் இந்த தேசியக்கொடி மற்றும் கொடிக்கம்பம் உருவாக்கப் பட்டுள்ளது.
லாகூரின் அன்னார்கலி பசாரில் இருந்து பார்த்தால் கூட வானில் மூவர்ண கொடி பட்டொலி வீசி பறப்பதை காண முடியும் என தெரிவிக்கப் பட்டது.
Thanks for Your Comments