பாகிஸ்தானில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், அரசியல் கட்சி தலைவரு மான இம்ரான் கானின் உருவத்திலான கேக், பிரபலமாகி வருகிறது.
பாகிஸ்தானில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சி வெற்றி பெற்றது.
இந்த கட்சி, தனது பிரதமர் வேட்பாளராக இம்ரான் கானை, 6 ம் தேதி, அதிகாரப் பூர்வமாக அறிவிக்க உள்ளது.
விரைவில் பிரதமராக பதவியேற்க உள்ள இம்ரான் கான், முதற் கட்டமாக 15 முதல் 20 அமைச்சர் களோடு கொண்ட அமைச்சரவையை அமைப்பார் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக் கின்றன.
இம்ரான் கானின் வெற்றியை கொண்டாடும் வகையில், அவரது உருவத்தி லான கேக்குகளை கட்சியினர் வெட்டி கொண்டாடி வருகின்றனர்.இதன் காரணமாக, இம்ரான் கான் கேக்கிற்கு மவுசு அதிகரித்து வருகிறது.
Thanks for Your Comments