தி.மு.க. தலைவர், பொருளாளர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை தொடங்கியது.
இதில் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தி.மு.க. தலைவர் பதவிக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியிடம், வேட்பு மனுவை ஸ்டாலின் அளித்தார்.
அவருக்கு 65 மாவட்ட செயலாளர்கள் முன் மொழிந்தனர். அதற்கு முன் சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் வேட்பு மனுவை வைத்து ஸ்டாலின் ஆசி பெற்றார்.
இதே போன்று பொருளாளர் பதவிக்கான வேட்பு மனுவை அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரைமுருகன் தாக்கல் செய்தார்.
அவரும் ஸ்டாலினுடன் கருணாநிதியின் நினைவிடத்தில் வேட்பு மனுவை வைத்து ஆசி பெற்றார்.
அறிவாலயத் தில் நடைபெற்ற திமுக தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் மாலை 4 மணியுடன் நிறைவுப் பெற்றது.
திமுக தலைவர் பதவிக்கு ஸ்டாலின், பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் செய்தி சேனலுக்கு பேட்டி யளித்துள்ள ஆர்.எஸ். பாரதி, திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வாகிறார்.
வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் அவர் தலைவராக தேர்வு செய்படுகிறார்.
திமுக தொடங்கிய பிறகு, அதன் 2வது தலைவராக மு.க.ஸ்டாலின் பதவியேற்கிறார்.
திமுக பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலின் தலைவராக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் படுவார் என கூறியுள்ளார்.
Thanks for Your Comments