சென்னை தியாகராய நகரில் நெதர்லாந்து இளம்பெண் மர்ம மரணமடைந்த விவகாரத்தில்,
அந்த பெண் நெதர்லாந்து மொழியில் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றி யுள்ளனர்.
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் லிண்டா இர்ரேனா. பத்திரிகையாளர் என்று கூறிக் கொண்டு கடந்த 27-ஆம் தேதி தியாகராயநகரில் உள்ள
தனியார் விடுதியில் தங்கிய இவர், அறையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
போலீசாரின் புலனாய்வில் அவரது படுக்கை அருகில் விஷமருந்து கண்டு பிடிக்கப்பட்டது.
மேலும் அந்த அறையில் 3 தனி காகிதங்களில் நெதர்லாந்து மொழியில் லிண்டா எழுதி வைத்திருந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர்.
நெதர்லாந்தில் டச் ((Dutch)), பாப்பியமெண்டோ ((Papiamento)), ஃப்ரிசியன் ((Frisian)) ஆகிய மொழிகள் பயன்படுத்தப் படுவதால்,
லிண்டா எந்த மொழியில் எழுதி யிருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க போலீசார், கடிதத்தை டெல்லியில் உள்ள நெதர்லாந்து தூதரகத்துக்கு அனுப்பி யுள்ளனர்.
லிண்டாவின் உறவினர் களுக்கு தூதரகம் மூலம் தகவல் கொடுக்கப் பட்டுள்ள நிலையில் அவர்கள் வந்து
உரிய அனுமதிக்குப் பிறகே பிரேதப் பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
Thanks for Your Comments