மதுரையில் தி.மு.க யார் பக்கம்? - பறக்கும் அழகிரி !

0
தி.மு.க பொதுக்குழு கூட்டம் வரும் 28-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. அதில், கட்சியின் தலைவராக ஸ்டாலின் முடிசூட இருக்கிறார். 
தமிழகம் முழுவதும் அதற்கான வேலைகள் ஜோராக நடந்து வருகின்றன. இதை முறியடிக்கும் வகையில் தி.மு.க தொண்டர்கள், 

தன் பக்கம் தான் இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்க தனது ஆதரவாளர் களை மு.க.அழகிரி சந்தித்துக் கொண்டிருக் கிறார். 

இதற்காக, ஏறக்குறைய 9 ஆண்டுக்கால அரசியல் அமைதிக்குப் பின்னர், இப்போது தன்னுடைய பலத்தைக் காட்ட படையைத் திரட்டும் வேலையில் ஈடுபட்டுள்ளார். 

அதற்காக, சென்னை க்கும் மதுரைக்கும் விமானத்தில் பறக்கிறார். கட்சி நிர்வாகிகளின் வீடுகளுக்குப் போகிறார்; நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

இப்படி, மு.க. அழகிரி முஸ்தீபு காட்டும் அதே நேரத்தில், ஸ்டாலினை கட்சியின் தலைவர் ஆக்க வேண்டும் என்று தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் தீர்மானம் நிறைவேற்றி வருகிறார்கள். 

ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களும் தீர்மானம் போடும் நிலையில் தி.மு.க மகளிரணியும் கனிமொழி தலைமையில் கூட்டம் போட்டு தீர்மானம் நிறைவேற்றி விட்டது. 

ஸ்டாலினு க்குத் தான் ஆதரவு என்று மகளிரணிச் செயலாளரும் தங்கையுமான கனிமொழி யும் அறிவித்து விட்டார். 

அவர்கள் தீர்மானத்தில், ``தி.மு.க அடிமட்டத் தொண்டராக இருந்து படிப்படியாக அரசியல் பாடம் கற்று, 

தலைவர் கலைஞர் வைத்த சோதனைகளில் வெற்றி பெற்றவர் ஸ்டாலின். அவர், மிசாவில் சிறை சென்று, தியாகியாகச் சிறை மீண்டு, 

சென்னை மேயராக உயர்ந்து, துணை முதல்வராக அரசு நிர்வாகத்திலும் பயிற்சி பெற்றவர். 


தமிழ் மொழியின் மேன்மைக்கா கவும் அயராது உழைப்பார் என்ற நம்பிக்கை அனைவரு க்கும் உள்ளது. 

அத்தனைக்கும் மேலாக ஓய்வின்றி உழைக்கக் கூடிய ஸ்டாலின், கழகத்தின் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்று 

மகளிரணி உளமார விரும்புகிறது, முன் மொழிகிறது'' என்று தீர்மானத்தில் வலியுறுத்தி யுள்ளனர்.

இந்த நிலையில், `மதுரை தி.மு.க-வினர் இதுவரை ஸ்டாலினுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட வில்லை; 

தீர்மானம் போடவில்லை' என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. அதாவது, ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி போர்க்கொடி தூக்கி, 

சென்னையில் பேரணி நடத்த ஏற்பாடு செய்து வரும் நிலையில் மதுரை தி.மு.க மவுனமாக இருக்கிறது என்று மு.க.அழகிரி ஆதரவாளர்கள் சொல்லி வந்தார்கள். 

அதற்குப் பதில் சொல்லும் வகையில், மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மாநகர் ஆகிய மாவட்டங்கள் சார்பில் மு.க. ஸ்டாலினுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட் டுள்ளனர். 

மாவட்டச் செயலாளர்கள் பி.மூர்த்தி எம்.எல்.ஏ., மு.மணிமாறன் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கை யில், 
``கலைஞரின் பெரும் புகழை காக்கும் வகையில் தலைவர் கலைஞரின் வடிவமாகக் 

கோடான கோடி தொண்டர்களின் எதிர் பார்ப்பாய் இருக்கும் மு.க.ஸ்டாலினை கழகத் தலைவராக வர முன் மொழிகிறோம். 

பள்ளி, கல்லூரி படிப்பின் போதே தமது அரசியல் மற்றும் பொது வாழ்வை தொடங்கிய மு.க. ஸ்டாலின், கழகத்தின் தலைவராக வேண்டும். 

அது தமிழர்களு க்கும் தமிழ் சமுதாயத்து க்கும் தேவையான ஒன்று. அந்தப் பொன்நாள் விரைவில் வர உள்ளது. 

இதுவே கோடான கோடி தொண்டர்களின் எதிர்பார்ப்பு. ஸ்டாலினை கழகத் தலைவராக முன்மொழியும் வாய்ப்பைப் பெற்றதற்கு பெருமைப் படுகிறோம்'' என்று கூறியுள்ளனர்.

மதுரை மாநகர் மாவட்ட பொறுப்புக்குழுத் தலைவர் கோ.தளபதி, ``கழகச் செயல் தலைவர் தமது உழைப்பால் சிகரமாகவும், 

கழகத்தினரிடம் பற்று கொள்வதில் இளம்தென்றல் போலவும், வரலாற்றில் சிவப்புச் சூரியனாக உழைப்பே முன்னேற்றத்து க்குக் காரணம் என்று கூறும் மு.க.ஸ்டாலின்,

 கழகத் தலைவராக அத்தனை தகுதியும் பெற்றவர் என்பதை நாடே அறியும். கலைஞர் வழியில் மிசா போராட்டம் கண்டவர். 

தமது உயிரையும், துச்சமாக மதித்து சிறை சென்றார். மக்கள் விரோத அரசை எதிர்த்தும், மக்களுக்காகவும் பலமுறை சிறைச்சாலை சென்றவர். 

தமது பள்ளி, கல்லூரி படிப்பின் போது அரசியல் களம் கண்டவர். இப்படி, சொல்லிக் கொண்டே போகலாம். 


இத்தனை பெருமைமிக்க செயல் தலைவர், கழகத் தலைவராக மதுரை மாநகர மாவட்டக் கழக சார்பாக முன்மொழிகிறோம்'' என்று கூறியுள்ளார்.

இப்படி, ஸ்டாலினுக்கு ஆதரவாக மதுரை தி.மு.க தீர்மானம் போட்டுள்ள நிலையில், திருச்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய 

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, ``ஏக மனதாக மு.க.ஸ்டாலினை கழகத் தலைவராக ஏற்றுக் கொண்ட முதல் மாவட்டமாகத் திருச்சி திகழும். 

வருகின்ற 26-ம் தேதி, தலைவர் பதவிக்கு செயல் தலைவர் வேட்புமனு தாக்கல் செய்கிறார். 28-ம் தேதியன்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். 

தலைவர் சொன்னபடி, தலைவர் காட்டிய வழியில் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று, அவரைக் கட்சியின் தலைவராக்கு வோம். 

வருகின்ற தேர்தலில் அவரை முதல்வராக்க உறுதி யேற்போம்'' என்று அனைத்து தி.மு.க மாவட்டச் செயலாளர் தீர்மானங் களையும் தாண்டி முழங்கி யிருக்கிறார்.
வரும் 28-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலய த்தில் நடைபெறும் பொதுக்குழுவில், 'தணிக்கைக் குழு அறிக்கை, தலைவர், பொருளாளர் தேர்தல் நடைபெறுகிறது. 

கூட்டம், அன்றைய தினம் காலை 9 மணிக்குத் தொடங்குகிறது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் செயல் தலைவர் ஸ்டாலின், கட்சியின் தலைவர் ஆகிறார். 

முதன்மைச் செயலாளர் துரை முருகனுக்கு பொருளாளர் பதவி கொடுக்கப் படுகிறது. 

எனவே, அவரிடம் இருக்கும் முதன்மைச் செயலாளர் பதவி, முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவிடம் கொடுக்கப்படும். 

தலைவர், பொருளாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 26-ம் தேதி தொடங்குகிறது. 

அதை முன்னிட்டு,தி.மு.க மாவட்ட, மாநில நிர்வாகிகள் சென்னையை நோக்கிக் கிளம்ப தொடங்கி விட்டார்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings