சென்னை மெரினாவி லுள்ள கருணாநிதி நினைவிடத்தில், மு.க.அழகிரி, இன்று, தனது மனைவி, மகன் துரை தயாநிதி, மகள் கயல்விழி ஆகியோருடன் வந்து அஞ்சலி செலுது்தினார்.
இதன் பிறகு நிருபர்களிடம் அவர் அளித்த பேட்டி: எனது அப்பாவிடம் எனது ஆதங்கத்தை வேண்டிகிட்டு இருக்கேன்.
அந்த ஆதங்கம் என்ன என்பது இப்போது தெரியாது உங்களுக்கு.
என்னுடைய தலைவர் கலைஞரின் உண்மை யான விசுவாசமுள்ள உடன் பிறப்புகள் என்பக்கம் உள்ளனர்.
தமிழகத்தி லுள்ள அத்தனை விசுவாசிகளும் எனது பக்கம் உள்ளனர், என்னை ஆதரித்து கொணம் டுள்ளனர்.
ஆகவே, இதற்கு காலம் பின்னால் பதில் சொல்லும் என்பதோடு நான் நிறுத்திக் கொள்கிறேன் என்றார்.
உங்கள் ஆதங்கம் கட்சி தொடர்பானதா, குடும்பம் தொடர்பானதா என்ற நிருபர் கேள்விக்கு, கட்சி தொடர்பானது தான் என்று அழகிரி பதில் அளித்தார்.
நாளை திமுக செயற்குழு கூட உள்ளதே என்ற நிருபர்கள் கேள்விக்கு, செயற்குழு பற்றி என்னிடம் கேட்காதீர்கள்.
அது பற்றி எனக்கு தெரியாது. நான் இப்போது திமுகவில் இல்லை என்பதால், அதுபற்றி என்னிடம் கேட்காதீர்கள் என்றார், அழகிரி.
திமுகவில் மீண்டும் இணைவீர்களா என்ற நிருபர்கள் கேள்விக்கு, திமுகவில் மீண்டும் இணைவது குறித்து எனக்கு தெரியாது என்று அழகிரி பதிலளித்தார்.
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிறகு, மு.க.ஸ்டாலின் அக்கட்சி தலைவராக உருவெடுக்க உள்ளதாக கூறப்படும் நிலையில்,
அழகிரி, தனது பக்கம் தான் திமுக விசுவாசிகள் உள்ளதாக கூறியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
அழகிரி பேட்டியளித்த போது அவர் ஆதரவாளர்கள், அஞ்சா நெஞ்சன் அழகிரி வாழ்க என கோஷ மிட்டனர்.
Thanks for Your Comments