கர்நாடகா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு பசி கொடுமையால் கதறி அழும் மக்களிடம்,
முகம் சுளிக்க வைக்க வகையில் அமைச்சர் ஒருவர் நடந்து கொண்டுள்ள வீடியோ வைரலாக பரவி வருகிறது.
கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தென்மேற்கு பருவ மழை பெய்துள்ள தால், மாநிலமே வெள்ளத்தின் நடுவில் தத்தளித்து வருகிறது.
இதில் பாதிக்கப்பட்ட பொது மக்கள் பலரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து, உண்ண உணவு கூட இன்றி தவித்து வருகின்றனர்.
அவர்களுக்கு ஒட்டு மொத்த இந்தியாவும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வரும் வேளையில்,
பசியால் வாடிவரும் மக்களுக்கு தமிழகத்தி லிருந்து பல்வேறு உதவிகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இது போல் கர்நாடகாவி லும் வெள்ளம் ஏற்பட்டு மாநிலத்தின் சில பகுதிகள் பாதிக்கப் பட்டுள்ளன.
இந்த நிலையில் அவர்களை சந்தித்து உணவு வழங்க சென்ற கர்நாடக அமைச்சர் எச்.டி ரேவண்ணா எதோ .....
Disgusting display of insensitivity by Karnataka Minister for PWD H D Revanna. Throwing biscuit packs at people in a relief camp, all for a photo op! It isn't enough that govt ensures ppl's safety at times like this, remember to treat them with dignity too! pic.twitter.com/FsA5me1TDj— Anusha Ravi (@anusharavi10) August 20, 2018
ரொட்டி துண்டுகளை தூக்கி வீசுவதை போல, பொது மக்களை நோக்கி பிஸ்கட் பாக்கெட்டு களை தூக்கி வீசியுள்ளார்.
இதனை வீடியோவாக பதிவு செய்த இளைஞர் ஒருவர் சமூக வலை தளத்தில் பதிவிட்டதை தொடர்ந்து,
அவருடைய கீழ்த்தரமான செயலுக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் கடும் கண்டனை தெரிவித்து வருகின்றனர்.
Thanks for Your Comments