திருவனந்த புரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ஜார்கண்டில் கடந்த மாதம் சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து காங்., எம்.பி., சசி தரூர் பேசினார்.
அப்போது அவர், சுவாமி விவேகானந்தர் இன்று இந்தியாவில் இருந்திருந்தால் சுவாமி அக்னிவேசை போன்று அவரும் குண்டர்களால் தாக்கப்படுவார்.
அவர் முகத்திலும் இன்ஜின் ஆயில் ஊற்றி தாக்கியதுடன், தெருவில் கீழே தள்ளி அடித்திருப் பார்கள்.
ஏனெனில் சுவாமி விவேகானந்தர் மக்களை மதிக்க வேண்டும். மனிதநேயம் தான் மிக முக்கியம் என சொன்னவர்.
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தின்படி கடந்த 4 ஆண்டுகளில் 2,920 மதக் கலவரங்கள் நடந்துள்ளன.
பசுவதை தொடர்பான தாக்குதல் காரணமாக 70 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
இவற்றில் கடந்த 4 ஆண்டு கால பா.ஜ., ஆட்சியில் மட்டும் 68 வழக்குகள் பதிவாகி உள்ளன என்றார்.
கடந்த மாதம், '2019 லோக்சபா தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றால் இந்தியா இந்து பாகிஸ்தான் ஆகி விடும்.
இவர்கள் இந்திய அரசியல் சாசனத்தை அழித்து விட்டு புதியது ஒன்றை எழுதி விடுவார்கள்' என்று சசி தரூர் பேசியது பெரும் சர்ச்சையானது.
கடும் எதிர்ப்பு மற்றும் சர்ச்சை காரணமாக பின்னர் அதனை சசி தரூர் திரும்பப் பெற்றது குறிப்பிடத் தக்கது.
Thanks for Your Comments