நூற்றாண்டில் கண்டிராத மிகப் பெரிய மழை, வெள்ளத்தை கேரளா சந்தித்துள்ளது.
10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தாங்கள் வாழ்ந்த பகுதியில் இருந்து இடம்பெயர நேர்ந்துள்ளது.
இந்த மாபெரும் மழைக்கும், வெள்ளத் திற்கும் 'உலக வெப்பமயமாதல்' தான் முக்கிய காரணம் என் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்
கேரளாவில் பெய்துள்ள மழை சாதாரண மானது கிடையாது.
ஆகஸ்ட் மாதத்தில் (1 முதல் 20), மாநில 771 மில்லி மழைப் பொழிவு ஏற்பட்டு உள்ளது. 179 சதவீதம் அதிகமாக இருந்தது.
முல்லைப் பெரியாறு மற்றும் இடுக்கு உள்ளிட்ட 80 நீர்தேக்கங்களில் 78 நீர் நிரம்பி திறந்து விடபட்டு உள்ளன.
இந்த திடீர் நீர் திறப்பால் எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், பத்தனம்திட்டா, ஆலப்புழா மற்றும் திருச்சூர் மாவட்டங்களின் வெள்ளம் ஏற்பட்டது.
கேரளா இந்தியாவின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக சதுர கிலோ
இதைப்போன்ற ஒரு மிக மோசமான ஒரு தட்ப வெப்ப மாற்றத்தை காண்பது மிகவும் அரிது என்பதே வானிலை ஆய்வு மைய புள்ளி விவரம் கூறுகிறது
கேரளாவில் ஏற்பட்ட இந்த ஒரு வெள்ள நிகழ்வை மட்டுமே வைத்து பருவநிலை மாறுதலுடன் தொடர்பு படுத்துவது கடினமானது.
எனினும் 1950 முதல் 2017ம் ஆண்டுகளு க்கு நடுவேயான மழை, வெள்ள அளவு சில நேரங்களில் மும்மடங்கு அதிகரித்துள்ளது கவனிக்கத் தக்கது" என்கிறார்
மும்பை அருகேயுள்ள இந்திய வெப்ப மண்டல வானிலை தொழில்நுட்பத்தின் பருவநிலை பிரிவு விஞ்ஞானி ராக்சி மேத்யூ கொல்.
இந்த காலகட்டத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மிகப்பெரிய மழைப்பொழிவு
மற்றும் அதைச் சார்ந்த அழிவுகளால் 69 ஆயிரம் மக்கள் பலியாகி உள்ளனர் 17 லட்சம் மக்கள் வீடுகளை இழந்துள்ளனர் என்றும்
கடந்த ஆண்டு நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதழில் வெளியாகியுள்ள மேத்யூ எழுதிய கட்டுரையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
"அரபிக் கடலில் ஏற்படும் அதிவேக வெப்பம், பருவ மழை மேகங்களை சுழன்றடிக்க செய்து மிகக் குறுகிய காலத்தில் அதிகப் படியான மழைப் பொழிவை அளிக்கின்றது.
அரபிக் கடலிலின் ஈரப்பதம் உள்நாட்டில் கொண்டு பெரு மழையாக கொட்டப் படுகிறது" என்கிறார் ராக்சி மேத்யூ கொல்.
இப்போது நாம் பார்த்த கேரள வெள்ளம் என்பது உலக வெப்ப மயமாதலின் ஒரு பகுதி தான் என்கிறார்
ஜெர்மனியி லுள்ள பருவநிலை தாக்கங்கள் குறித்த ஆய்வுக்கான போட்ஸ்டான் இன்ஸ்டிடியூட் விஞ்ஞானி கிரா வின்கே.
இப்போது உள்ள மாசு அளவு அப்படியே தொடர்ந்தால் நம்மால் சமாளிக்க முடியாத அளவுக்கு பேராபத்தில் சிக்கிக் கொள்வோம் என்று தெரிவிக்கிறார் அவர்.
"கடந்த பத்தாண்டுகளில் பருவநிலை மாறுதல் காரணமாக நிலப்பகுதி வெப்பம் அதிகரித்ததால், மத்திய
மற்றும் தென் இந்தியாவில் பருவ மழைப் பொழிவு அதிகரித்துள்ளது" என்கிறார்
ரஷ்யாவின் அறிவியல் அகாடமியை சேர்ந்த பருவமழை நிபுணரும், பேராசிரியருமான எலேனா சரோவ்யத்கினா.
பூமி தொழில் மயமாதல் காலத்திற்கு முன்பாக இருந்ததை விட இப்போது ஒரு டிகிரி அளவுக்கு சராசரி வெப்பநிலை அதிகரிப்பை சந்தித்துள்ளது.
இந்த மாற்றத்திற்கே இவ்வளவு பெரிய பேரழிவுகளை உலகம் சந்திக்க ஆரம்பித்துள்ளது.
இதே நிலை நீடித்தால் இந்தியாவின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
196 நாடுகள் ஏற்றுக் கொண்ட பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம், உலக வெப்பம யமாதலை, 2 டிகிரி செல்சியசுக்கும் குறைவாக வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்து கிறது.
முடிந்தால் 1.5 டிகிரி செல்சியசு க்கும் கீழே வெப்பமய மாதலை கட்டுப் படுத்த வேண்டும் என்று சுட்டிக் காட்டுகிறது.
ஆனால் தற்போதுள்ள நிலையில் 3 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் வெப்ப மயமாதலின் உயர்வு உள்ளது.
"இதன் காரணமாக மழைக்காலம் மிக அதிக மழைப் பொழிவை சந்திக்கும் என்றும்
கோடை காலம் மிக அதிகமான வெப்பத்தை சந்திக்கும்" என்று எச்சரிக்கிறார் கிரா வின்கே.
Thanks for Your Comments