கேரளாவில் மட்டுமின்றி கர்நாடகாவிலும் சில மாவட்டங் களில் பலத்த மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் மோசமாக பாதிக்கப் பட்டுள்ள பகுதி குடகு மாவட்டம்.
அதற்கு அடுத்தாற்போல மங்களூரை உள்ளடக்கிய தென் கனரா மாவட்டம், சாம்ராஜ்நகர் மாவட்டம்
ஆகியவை பலத்த மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளன.
இதில் குடகு மாவட்டத்தில் நிலச்சரிவு காரணமாக அதிக சேதம் ஏற்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி குடகு மாவட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
பல பகுதிகளிலும் இணையதள சேவை மற்றும் மின்சார சேவை இன்றி மக்கள் தவித்து வருகின்றனர்.
ராணுவத்தினர் மக்களை மீட்கும் நடவடிக்கை களில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல்கட்ட பாதிப்பு நிவாரண நிதியாக கர்நாடக முதலமைச்சர் 200 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து உத்தர விட்டுள்ளார்.
17 முகாம்கள் அமைக்கப் பட்டுள்ளதாக வும், வெள்ளத்தில் சிக்கிய 873 பேர் இதுவரை குடகு மாவட்டத்தில் மீட்கப் பட்டுள்ளர் என்றும், துணை முதல்வர் பரமேஸ்வர் தெரிவித் துள்ளார்.
ராணுவம், கடற்படை வீரர்களும், தேசிய பேரிடர் மீட்பு படையினர், சிவில் பாதுகாப்பு குயிக் ரெஸ்பான்ஸ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட் டுள்ளனர்.
Thanks for Your Comments